விடைத்தாள் திருத்துவதில் அலட்சியம் காட்டினால் கடும் நடவடிக்கை: ஆசிரியர்களுக்கு ேதர்வு துறை எச்சரிக்கை

சென்னை: பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசியர்கள் திருத்திய விடைத்தாளில் தவறுகள் இருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத்துறை இயக்குநர் எச்சரித்துள்ளார். தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்ேதர்வுகள் மார்ச் 1 முதல் தொடங்கியது. பிளஸ் 2 தேர்வு இன்றுடன்(19ம் தேதி) முடிகிறது. இதற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி, வரும் 29ம் தேதி தொடங்க உள்ளது. தமிழ்,ஆங்கிலம், உள்ளிட்ட மொழிப்பாடங்களுக்கான விடைத்தாள்கள் முதலில்  திருத்தப்பட உள்ளன. அதில் முதன்மை தேர்வு கண்காணிப்பாளர்கள் திருத்துவார்கள். அதைத் தொடர்ந்து துணை தேர்வு கண்காணிப்பாளர்கள் திருத்துவார்கள். அரசுத் தேர்வுத் துறையால் வழங்கப்படும் விடைக்குறிப்பில்(கீ ஆன்சர்) தவறு இருந்தால், அவற்றை மாற்றி அமைப்பார்கள். அதற்கு பிறகு துணை கண்காணிப்பாளர்கள் 30ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணியை தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி முடிப்பார்கள்.  பிளஸ் 2 தேர்வின் மற்ற பாடங்களுக்கான விடைத்தாள்கள் மார்ச் 30ம் தேதி திருத்தத் தொடங்குவார்கள். இதைத் தொடர்ந்து, அனுபவம் மிக்க முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுவார்கள்.

விடைத்தாள் திருத்துவதற்கு முன்னதாக, ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட அந்த குறிப்பிட்ட விடைத்தாள்களில் பக்கங்கள் சரியாக உள்ளதா என்று சரிபார்க்க வேண்டும். அதில் ஏதாவது  குறை இருந்தால், முதன்மைத் தேர்வர்களிடம் தெரிவிக்க வேண்டும். அனைத்து பக்கங்ளிலும் உள்ள விடைகளை விடாமல் திருத்த வேண்டும். மதிப்பீடு செய்த பிறகு எழுதாத பக்கங்களுக்கு குறுக்கு கோடுபோட வேண்டும். விடை எழுதாமல் விட்டிருந்தால் அதை சிவப்பு மையால் கோடிட வேண்டும். புவியியல், வரலாறு, வணிகக் கணிதம் ஆகியவற்றில் உள்ள இணைப்புகள் விடுபடாமல் கண்டிப்பாக பார்த்து திருத்த வேண்டும்.  இதற்கு பிறகு, தேர்வு முடிவுகள் வெளியானதும், உதவித் தேர்வாளர் நிலையில் ஏற்படும் தவறுகள், விடைத்தாள் நகல் பெறுதல், மறுகூட்டல் நிகழ்வின்போது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: