திருப்பதி கோவிந்தராஜர் கோயிலில் திருடப்பட்ட தங்க கிரீடத்தை கண்டுபிடிக்க தமிழகத்திடம் உதவி கேட்பு: எஸ்பி தகவல்

திருமலை: ஆந்திர மாநிலம் திருப்பதி புறக்காவல் மாவட்ட எஸ்பி அன்பு ராஜன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:திருப்பதி புறக்காவல் மாவட்டத்தில் அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.  மூன்று கம்பெனிகள் துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு நேற்று கொடி அணிவகுப்பு  நடத்தப்பட்டது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூடுதலாக துணை ராணுவத்தினர் வர உள்ளனர். திருப்பதி தொகுதியில் 6 வாக்குச்சாவடிகள் பதற்றமானது என அடையாளம் காணப்பட்டுள்ளது.திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் திருடப்பட்ட மூன்று தங்க கிரீடங்களை கண்டுபிடிப்பதற்காக டிஎஸ்பி ரவி பிரகாஷ் தலைமையில் தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர். இதற்காக மகாராஷ்டிரா, தெலங்கானா,   பீகார் உட்பட மாநிலங்களில் தொடர்ந்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

மேலும் தமிழகத்தில்  சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு காணாமல் போன கிரீடங்கள் குறித்த புகைப்படங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு உள்ள போலீசாரின் உதவியும் கேட்கப்பட்டுள்ளது. மற்ற மாநில  போலீசாருக்கும் காணாமல் போனது  கீரிடம் குறித்து தகவல் அளிக்கப்பட்டு உள்ளது. திருடி சென்றவர்கள் விவரங்கள் கிடைத்துள்ள நிலையில் தொடர்ந்து  கண்காணிக்கப்பட்டு வருகிறது. விரைவில் குற்றவாளிகளை கைது  செய்து கிரீடம் பறிமுதல் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: