பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிளேடியேட்டர்ஸ் சாம்பியன்

கராச்சி: பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் பைனலில் பெஷாவர் ஸால்மி அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய குவெட்டா கிளேடியட்டர்ஸ் அணி  சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பரபரப்பான இறுதிப் போட்டியில், டாசில் வென்ற கிளேடியேட்டர்ஸ் முதலில் பந்துவீசியது. பெஷாவர் ஸல்மி அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 138 ரன் எடுத்தது. அமின் அதிகபட்சமாக 38 ரன் எடுத்தார். கம்ரான் அக்மல் 21, மக்சூட் 20, கேப்டன் டேரன் சம்மி 18 ரன் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய கிளேடியேட்டர்ஸ் 17.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 139 ரன் எடுத்து அபாரமாக வென்றது. வாட்சன் 7 ரன் எடுத்து ரன் அவுட்டானார். அகமது  ஷெஷாத் 58* ரன் (51 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), அசன் அலி 25, ரைலீ ரிசவ் 39* ரன் எடுத்தனர்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: