தேர்தல் பறக்கும்படை சோதனையில் அ.ம.மு.க மாவட்ட செயலாளரின் சகோதரரிடம் 4 லட்சம் பறிமுதல்: குறிஞ்சிப்பாடி அருகே பரபரப்பு

குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடி அருகே தேர்தல் பறக்கும்படையினர் நேற்று நடத்திய வாகன சோதனையில் அமமுக மாவட்ட செயலாளரின் சகோதரரிடம் ₹4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.மக்களவை தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தி வருகின் றனர். பணம், பொருட்கள் ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்டால் அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்காக அமைக்கப்பட்ட தேர்தல் பறக்கும்படை தாசில்தார் சிவா மற்றும் காவல்துறையினர் நேற்று காலை 7.30 மணியளவில் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பச்சையாங்குப்பம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியே வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில் காரை ஓட்டி வந்தவரின் பேன்ட் பாக்கெட்டில் ₹4 லட்சம்  இருந்தது. விசாரணையில் உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட பணம் என தெரியவந்தது. தொடர்ந்து விசாரித்த போது காரை ஓட்டி வந்தவர் காட்டுமன்னார்கோவில் வட்டம் ஓமாம்புலியூர் ரோட்டை சேர்ந்த கே.எஸ்.கே.வேல்முருகன், கான்ட்ராக்டர் எனவும், தொழில் விஷயமாக பணம் எடுத்து சென்றதாகவும் தெரியவந்தது. மேலும் இவர் கடலூர் மேற்கு மாவட்ட அமமுக செயலாளர் கே.எஸ்.கே.பாலமுருகனின் சகோதரர் எனவும் தெரியவந்தது. இதையடுத்து ₹4 லட்சத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் அதனை குறிஞ்சிப்பாடி தாசில்தார் உதயகுமாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்தப்பணம் நெய்வேலி சரக கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: