ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்து அதிமுக எம்எல்ஏ காயம்

கோவை: கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜூனன்.  நேற்று காலை ரேஸ்கோர்ஸ் பகுதியில், வாக்கிங் சென்று விட்டு கோவை செல்வபுரத்தில் உள்ள வீட்டுக்கு ஸ்கூட்டரில் திரும்பிக் கொண்டிருந்தார். லங்கா கார்னர் பாலத்தின் கீழ் பகுதியில் சாலையில் கொட்டியிருந்த ஆயிலில் டயர் வழுக்கி ஸ்கூட்டருடன் அம்மன் அர்ஜூனன் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை, கை, கால் பகுதிகளில் காயம் ஏற்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில் அர்ஜூனன் சிகிச்சை பெற்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: