பிரியங்கா காந்தி பப்பி: மத்திய அமைச்சர் விமர்சனம்

நொய்டா: காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை, `பப்பி’ என்று மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா விமர்சனம் செய்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது. புலந்த்சாஹர் மாவட்டத்தின் சிகந்திராபாத்தில் நடந்த பொது கூட்டத்தில் மத்திய கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா பிரியங்காவின் அரசியல் வருகை குறித்து பேசினார். அதில் அவர், ``பப்பு ராகுல் பிரதமராக வேண்டுமென்று ஆசைப்படுவதாக கூறுகிறார். மாயாவதி, அகிலேஷ் யாதவ், பப்பு என்ற வரிசையில் இப்பொழுது `பப்பி’யும் இணைந்துவிட்டார். எதிர்க்கால அரசியலில் அவர் இருப்பாரா என்பது தெரியவில்லை. அவர் புதிதாக என்ன கொண்டு வந்துவிட்டார்? மாநில கட்சித் தலைவர்களான மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கர்நாடக முதல்வர் குமாரசுவாமி போன்றவர்களால் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வர முடியாது.

மம்தா இங்கு வந்து கதகளி ஆடினாலோ, குமாரசுவாமி பாடினாலோ கவனிப்பார் யாருமில்லை. 72 எம்பி.க்களை வைத்திருக்கும் இவர்கள் எப்படி தனி மெஜாரிட்டிக்கு கூடுதலாக தேவைப்படும் 200 எம்பி.களை பெறுவார்கள்?’’ என்று பேசி உள்ளார்.இதுகுறித்து மாநில காங்கிரஸ் செயலாளர் தீரஜ் குஜ்ஜார் கூறுகையில், ``அவரது எண்ணங்களே வார்த்தைகளாக வெளிப்பட்டுள்ளது. அமைச்சர் பொறுப்பில் இருக்கும் அவர், பெண் தலைவர்கள் பற்றி இப்படி விமர்சித்திருப்பது கண்டனத்துக்குரியது. பாஜ தானாக முன்வந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: