போயிங் 737 மேக்ஸ்க்கு தடையால் விமான கட்டண உயர்வுக்கு தீர்வு காண ஆலோசனை

புதுடெல்லி: போயிங் 737 மேக்ஸ் தடையால் ஏற்பட்ட விமான கட்டண உயர்வுக்கு தீர்வு காண, சிவில் விமான போக்குவரத்து இயக்கநரகம் இன்று ஆலோசனை நடத்துகிறது.போயிங் 737 மேக்ஸ் ரக விமானம், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தோனேஷியாவில் இருந்து புறப்பட்டு சிறிது நேரத்திலேயே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 189 பயணிகள் இறந்தனர். இதுபோல், எத்தியோபிய தலைநகரில் இருந்து புறப்பட்ட இதே ரக விமானம் சில நாட்கள் முன்பு விபத்துக்கு ஆளானது. இதில் 4 இந்தியர் உட்பட 157 பேர் இறந்தனர். இதையடுத்து இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை தடை செய்தன.

 இதனால் விமான டிக்கெட் கட்டணம் 100 சதவீதத்துக்கு மேல் அதிகரித்து விட்டது. டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்ததால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும் விமர்சனங்கள் வந்தன. விமானங்கள் ரத்து செய்யப்படுவது அதிகரித்ததால், டிக்கெட்களை ரத்து செய்ய வேண்டிய நிலைக்கு பயணிகள் தள்ளப்பட்டனர். இதற்கேற்ப கடைசி நேர விமான டிக்கெட் புக்கிங்குகளால் டிக்கெட் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், விமான நிறுவனங்களுடன் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் இன்று ஆலோசனை நடத்துகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: