தொடர்ந்து 6வது நாளாக பங்குச்சந்தை ஏற்றம்

புதுடெல்லி: பங்குச்சந்தைகள் 6வது நாளாக நேற்றும் ஏற்றம் மும்பை பங்குச்சந்தை 70 புள்ளிகள் அதிகரித்தது.  தேர்தல் நெருங்கும் நிலையில் பங்குச்சந்தைகளில் திடீர் ஏற்றம் காணப்பட்டு வருகிறது. தொடர்ந்து 7வது நாளாக நேற்றும் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வை சந்தித்தது. நேற்று காலை வர்த்தகம் துவங்கியதும், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 38,132.96 புள்ளிகளாக ஏற்றம் அடைந்திருந்தது. ஆனால் சற்று நேரத்தில் திடீர் சரிவை சந்தித்து, 37,952.10 புள்ளிகளாக சரிந்தது. வர்த்தக இடையில் 38,369.59 புள்ளிள் என்ற உச்சத்தை அடைந்தது. வர்த்தக முடிவில் முந்தைய நாளை விட 70.75 புள்ளிகள் உயர்ந்து 38,095.07 புள்ளிகளாக இருந்தது.

இதுபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 35.35 புள்ளிகள் உயர்ந்து 11,462.20 புள்ளிகளாக இருந்தது.

 வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தை மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடுகளை தொடர்ந்து குவித்து வருகின்றனர். இந்த மாதம் 2 வாரங்களிலேயே இந்த முதலீடு ₹20,000 கோடியை தாண்டி விட்டது. அதோடு வர்த்தக பற்றாக்குறையும் குறைந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்பட்டு பங்கு மதிப்பு அதிகரித்துள்ளது என சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: