பூந்த ‘மல்லி’யை சூடப்போவது யார்...மும்முனை போட்டியில் திக்குமுக்காடும்

திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னையை ஒட்டியுள்ள சட்டமன்ற தொகுதிதான் பூந்தமல்லி. இந்த தொகுதியில், பூந்தமல்லி வட்டத்தின் பெரும்பகுதிகள், திருவள்ளூர் வட்டத்தின் ஒரு பகுதி, பூந்தமல்லி நகராட்சி மற்றும்  திருமழிசை பேரூராட்சி ஆகியவை உள்ளன. ஆதிதிராவிடர் மற்றும் வன்னியர் சமூகத்தினர் கணிசமாக வசிக்கும் இத்தொகுதியில், விவசாயம் பிரதான தொழிலாக விளங்குகிறது.பூந்தமல்லி தொகுதியில் கடந்த 1977 முதல் 2016 வரை நடந்த 10 தேர்தல்களில், 3 முறை திமுகவும், 3 முறை காங்கிரஸ், ஒரு முறை தமாகா, ஒரு முறை பாமக, இருமுறை அதிமுக வெற்றி பெற்றுள்ளன. இத்தொகுதியில், கடந்த 2011 தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றும் எவ்வித திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. தொடர்ந்து, 2016 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற டி.ஏ.ஏழுமலையும் தினகரன் அணிக்கு  தாவியதால், தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால், அவரும் தொகுதியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில், வரும் ஏப்ரல் 18 அன்று நடைபெறும் இடைத்தேர்தலில், திமுக சார்பில், முன்னாள் எம்.பி.,யான ஆ.கிருஷ்ணசாமி, அதிமுக சார்பில் பூவை ஒன்றிய துணை செயலாளர் வைத்தியநாதன், அமமுக சார்பில் தகுதி  நீக்கம் செய்யப்பட்ட டி.ஏ.ஏழுமலை ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு மும்முனை போட்டி உள்ளது.இதில், திமுக வேட்பாளரான முன்னாள் எம்.பி., ஆ.கிருஷ்ணசாமி கடந்த 25 ஆண்டுகளாக தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். அனைவரையும் அரவணைத்து செல்லும் குணம் கொண்டவர். வேட்பாளராக  அறிவிக்கப்பட்டதும், அனைத்து கிராமங்களுக்கும் சென்று கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.பூந்தமல்லி தொகுதியில் தீர்க்கப்படாமல் உள்ள பிரச்னைகள் குறித்து திமுக வேட்பாளர் ஆ.கிருஷ்ணசாமி கூறுகையில், ‘கடந்த 8 ஆண்டுகளாக அதிமுகவினர்தான் இத்தொகுதியில் எம்எல்ஏவாக உள்ளனர். தொகுதியில் எவ்வித  நலத்திட்டங்களை அவர்கள் செய்யவில்லை. இத்தேர்தலில் என்னை வெற்றிபெற செய்தால், தொகுதியில் உள்ள அனைத்து பிரச்னைகள் குறித்தும், சட்டமன்றத்தில் பேசி தீர்த்து வைப்பேன்’ என்றார்.

வரிந்துகட்டி நிற்கும் பிரச்னைகள்

சென்னையிலிருந்து, வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்கள், பெங்களூரூ உள்ளிட்ட  பகுதிகளுக்கு செல்லும் வழியில் உள்ள பூந்தமல்லி பஸ் நிலையப் பகுதியில்  எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாக உள்ளது.  அதுமட்டுமல்லாமல்,  பூந்தமல்லி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்,  பூந்தமல்லி அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட  நாளைய கோரிக்கை. மேலும்,  புதுசத்திரம் பகுதியில், கூவம் ஆற்றின் குறுக்கே  உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும்.தாமரைப்பாக்கத்தில் கிடப்பில்  உள்ள மாநகர போக்குவரத்து பணிமனை அமைக்கும் பணியை தொடர வேண்டும், கடந்த  2015ம்  ஆண்டு கனமழையால் முற்றிலும் சேதமான ஜமீன்கொரட்டூர் அணைக்கட்டை  புதிதாக கட்டவேண்டும் உள்ளிட்ட நீண்ட கால கோரிக்கைகள் இத்தொகுதியில் வரிசை  கட்டி நிற்கின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: