ராகுல் கேட்டுட்டாரு...வேறு வழியில்லை.. 3 தொகுதிகளில் ஜகா வாங்கும் காங்கிரசார்: சீட் கேட்க முடியாமல் புலம்பல்

தமிழகத்தில் ராகுல் காந்தி 3 தொகுதிகளை திமுக கூட்டணியிடம் விரும்பி கேட்டு வாங்கியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அந்த தொகுதியில் போட்டியிட விரும்பும் மற்ற நிர்வாகிகள் யாரை பிடித்து வாய்ப்பு  வாங்குவது என தெரியாமல் திணறி வருகின்றனர்.   தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அவை எந்தெந்த தொகுதிகள் என்பது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேட்பாளர் தேர்வை காங்கிரஸ் தீவிரமாக்கி வருகிறது. கன்னியாகுமரி, திருவள்ளூர்(தனி) உள்ளிட்ட சில தொகுதிகளுக்கு காங்கிரசார் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஆனால் 3 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்கள் இவர்கள் தான் என்று காங்கிரசாரே ஓரளவு முடிவு செய்து  வைத்திருகின்றனர். அதற்கு காரணம், மேலிடம் இந்த தொகுதிகளை பெற முக்கியத்துவம் கொடுத்த தகவல் தற்போது வெளியாகியிருப்பது தான். எனவே அந்த தொகுதியில் வாய்ப்பு கேட்க முடியாத நிலையில் உள்ளனர். அதாவது கரூர், திருச்சி,  கிருஷ்ணகிரி ஆகிய 3 தொகுதிகளை மேலிடம் கேட்பதாக கூறி கேட்டு பெற்றுள்ளனர். இந்த தொகுதிகள் ராகுல்காந்தி விரும்பி கேட்ட தொகுதிகள் என கூறப்படுகிறது.

அதாவது, இந்த தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் யார் என்பதை முடிவு செய்து, அதன் பின்னரே கேட்டதாக காங்கிரசார் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.  அதன்படி இந்த 3 தொகுதிகளில் போட்டியிடப் போவது யார் என்ற தகவலும் காங்கிரசார் மத்தியில் பேசப்படுகிறது. கரூர் தொகுதிக்கு ஜோதிமணியும், திருச்சியில் திருநாவுக்கரசரும், கிருஷ்ணகிரியில் செல்லக்குமாருக்கும் வாய்ப்பு  இருப்பதாக காங்கிரசார் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ராகுல் கேட்டு பெற்ற தொகுதி என்பதால் இனிமேல் யாரை பிடித்து இந்த 3 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு பெற முடியும் என்று அந்த தொகுதியில் உள்ள முக்கிய  நி்ரவாகிகள் புலம்பி வருகிறார்களாம்.

திருவள்ளூருக்கு 62 பேர் ஆசை

காங்கிரசிற்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளில் திருவள்ளூர் மட்டும் தான் தனித்தொகுதி. இந்த தொகுதியை குறி வைத்து முன்னாள் எம்பி விஸ்வநாதன், காங்கிரஸ் மகளிர் அணி தலைவர் ஜான்சிராணி, முன்னாள் எம்எல்ஏ  செல்வபெருந்தகை, விக்டரி ஜெயக்குமார், முன்னாள் எம்பி ராணி, எஸ்சி,எஸ்டி பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் பி.வி.தமிழ்ச்செல்வன், மத்திய சென்னை எஸ்சி,எஸ்டி பிரிவு மாவட்ட தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் என 62 பேர்  போட்டி போட்டு விருப்ப மனு அளித்துள்ளனர். இதனால், அந்த தொகுதியை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: