6 நாட்கள், தினமும் 4 மணி நேரம் ஹலோ வேட்பாளர்களே... 24 மணி நேரம் மட்டுமே!

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (19ம் தேதி) தொடங்குகிறது. இந்த தேர்தலை பொறுத்தவரை இன்று  தொடங்கும் வேட்புமனு தாக்கல் 8வது நாளான அடுத்த செவ்வாய்க்கிழமை முடிகிறது. 23ம் தேதி நான்காவது சனிக்கிழமை என்பதால் வங்கிகள் விடுமுறை. அன்று வேட்புமனு தாக்கல்  கிடையாது. அதற்கு மறுநாள் (24ம் தேதி) ஞாயிற்றுக்கிழமையும் வேட்புமனு தாக்கல் கிடையாது. எனவே 6 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கலை பொறுத்தவரை காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 3 மணிக்குள் முடிந்துவிடும். ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டுமே நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை கடந்த பல தேர்தல்களில்  பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி பார்த்தால் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் வீதம் 6 நாட்கள் என மொத்தமே 24 மணி நேரம் மட்டுமே மனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: