சீக்கிரம் வேட்பாளர்களை அறிவிங்க நாங்க காசு பார்க்க வேணாமா: காத்திருக்கும் ‘டூப்’ வேட்பாளர்கள்

தேர்தல் என்றாலே பலருக்கு பலவிதத்தில் கொண்டாட்டம். தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் 30 நாட்களே உள்ளன. இந்த குறுகிய நாட்களில் முடிந்தளவு சம்பாதிக்க காத்திருக்கின்றனர் டூப் வேட்பாளர்கள்.தேர்தலில் பெரிய கட்சிகளின் செலவுகளால் லாபமடைவோர் பட்டியலில் சில சுயேட்சைகளும் முக்கிய இடம் பிடிக்கின்றனர். பெரிய கட்சிகள் அறிவிக்கும் வேட்பாளர்களை எதிர்பார்த்து அந்த தொகுதிகளில் குறிப்பிட்ட சில  சுயேட்சைகள் வேட்பமனு தாக்கல் செய்வதும், பின்னர் குறிப்பிட்ட கட்சிகள் ‘கவனித்தால்’ அவருக்கு ஆதரவாக வாபஸ் பெறுவதும் தேர்தல் தோறும் நடைபெறும் எழுதப்படாத நடைமுறையாகி விட்டது.

மேலும் முக்கிய கட்சிகள் தங்களுக்கு எதிரியாக கருதப்படும் வேட்பாளரை தோற்கடிக்க நடத்தப்படும் மற்றொறு வியூகம் எதிர்கட்சி வேட்பாளர் பெயரில் உள்ள பலரை அதே தொகுதியில் சுயேட்சையாக களம் இறங்க வைப்பர்.  இவ்வாறு களம் இறக்கப்படும் ஒரே பெயருடையே வேட்பாளரும் நன்றாக கவனிக்கப்படுவர். இப்படி பலவிதங்களில் லாபம் இருப்பதால் பலர் சுயேட்சையாக களம் இறங்க ஆர்வமாக உள்ளனர். இந்த தேர்தலில் அதிமுகவின் பல தலைவலிகளில் ஒன்றாக கருதப்படுவது அமமுக வேட்பாளர்கள். எனவே அந்த கட்சி வேட்பாளர்கள் நிற்கும் தொகுதிகளில் அதே பெயருடைய ‘டூப்ளிகேட்’’ வேட்பாளர்களை தேர்வு செய்து  அதிமுக களம் இறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பலர் இப்போதே காசு, பணம், துட்டு, மணி கனவில் மிதக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: