காங்கிரஸ் கட்சி குழப்பம் ஏற்படுத்துவதை நிறுத்த வேண்டும்: மாயாவதி, அகிலேஷ் யாதவ் அட்வைஸ்

லக்னோ:  உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ராஷ்டிரிய லோக் தளம் ஆகியவை கூட்டணி வைத்து மக்களவை தேர்தலில் போட்டியிடுகின்றன. மொத்தமுள்ள 80 தொகுதிகளில் காங்கிரஸ் தலைவர் சோனியா  காந்தியின் ரேபரேலி, ராகுலின் அமேதி தொகுதிகளில் மட்டும் பகுஜன் சமாஜ் கூட்டணி வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி நேற்று முன்தினம் தான் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை அறிவித்தது. சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ராஷ்டிரிய லோக் தளம் கூட்டணிக்காக 7 தொகுதிகளிலும் மேலும் சில கட்சிகளுக்காக 5  தொகுதிகளிலும் போட்டியிடாமல் ஒதுங்குவதாக தெரிவித்தது.

இந்நிலையில் பகுஜன்சமாஜ் தலைவர் மாயாவதி தனது டிவிட்டர் பதிவில், “பாஜ.வை தோற்கடிப்பதற்கு சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ராஷ்டிரிய லோக் தளம் கூட்டணியே போதுமானது. நாங்கள் காங்கிரஸ் கட்சியுடன் எந்த  கூட்டணியும் வைத்துக் கொள்ளவில்லை. காங்கிரஸ் 80 தொகுதிகளிலும் தனது வேட்பாளர்களை நிறுத்திக் கொள்ளலாம். எங்கள் கூட்டணிக்கு 7 இடங்களை ஒதுக்கி குழப்பத்தை ஏற்படுத்தவதை காங்கிரஸ் நிறுத்தவேண்டும்”  என்று கூறியுள்ளார்.சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘எங்களுக்காக சீட்களை விட்டுத் தந்துள்ளதாக கூறி காங்கிரஸ் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்’’ என்று கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: