24 ஆண்டுகளுக்கு பிறகு கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோயிலில் நடைபெற்ற பரணேறு திருவிழா

கொல்லங்கோடு: கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோயிலில் 24 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற பரணேறு திருவிழாவில் 1000 கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரள-தமிழக எல்லை பகுதியான கொல்லங்கோடு பகுதியில் பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 24 ஆண்டுக்கு பிறகு பரணேறு திருவிழா இன்று காலை நடைபெற்றது. காளிதேவி தாரிக அசுரனை அளிக்க நடந்த போரில் வெற்றி பெற்றதன் நினைவாக இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது.

வயல்வெளியில் உயரமான பரண்களில் காளியும் அசுரனும் விடிய விடிய வார்த்தை போரில் ஈடுபட்டு, முடிவில் அசுரனை காளி வசம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை காண கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து கண்டு ரசித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: