2030-க்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டை கணிசமாக குறைக்க ஐ.நா பருவநிலை பேரவையில் தீர்மானம்

நைரோபி: வரும் 2030-ம் ஆண்டிற்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டை கணிசமான அளவு குறைக்க ஐ.நா பருவநிலை பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு 170 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.கென்யாவின் தலைநகர் நைரோபியில் 5 நாட்கள் நடைபெற்ற ஐக்கிய நாட்டு சபையின் சுற்றுச்சூழல் பேரவையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் 80 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் சேர்கின்றன. இதனை தடுக்க சர்வதேச நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், 2030-ஆம் ஆண்டிற்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டை கணிசமான அளவு குறைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஒரு முறை பயன்படுத்தி பின்னர் தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களை 2025-ம் ஆண்டிற்குள் கணிசமாக குறைக்க கோரிய தீர்மானத்தை அமெரிக்கா உள்ளிட்ட சில முக்கிய நாடுகள் எதிர்த்தன. இதனால் அந்த தீர்மானம் கைவிடப்பட்டது. இதனையடுத்து பேசிய ஐ.நா பருவநிலை பேரவையின் தலைவர் சீம் கிஸ்லர், இவ்விகாரத்தில் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் ஏற்ற தீர்வை கண்டறிவது சிரமம். எனவே தற்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பேச்சுவார்த்தையுடன் நின்று விடாமல், உறுதியாக அனைத்து நாடுகளும் செயல்படுத்த முன் வர வேண்டும் என கோரினார்.

ஒவ்வொரு ஆண்டும் 80 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் சேர்கின்றன. இதனை தடுக்க சர்வதேச நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், 2030-ஆம் ஆண்டிற்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டை கணிசமான அளவு குறைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நைரோபியில் நடைபெற்ற ஐ.நாவின் பருவநிலை பேரவை கூட்டத்தில் இந்த தீர்மானத்திற்கு 170 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. முன்னதாக 2025-ஆம் ஆண்டிற்குள், உலகம் முழுவதும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தடுக்க கோரும் தீர்மானத்திற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்ததால் தீர்மானம் கைவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: