இந்தோனேஷியாவில் கனமழைக்கு 50 பேர் பலி

ஜெயபுரா: இந்தோனேஷியாவின் பபுவாவில் பெய்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் 50 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. சுமார் 59 பேர் காயமடைந்துள்ளனர். இந்ேதானேஷியாவின் கிழக்கு பபுவா மாகாணத்தில் கனமழை பெய்து வருகிறது. மாகாண தலைநகர் ஜெயபுரா அருகே உள்ள சென்டனியில் நேற்று முன்தினம் இடைவிடாது மழை பெய்தது. இதன் காரணமாக அந்த பகுதியில்  பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. 10க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தால் சேதமடைந்தன.

வெள்ளப் பெருக்கு மற்றும் மழையினால் ஏற்பட்ட சம்பவங்களில் சிக்கி 50 பேர் உயிரிழந்தனர். மேலும் 59 பேர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த பகுதியில் உள்ள  மக்களை வெளியேற்றும் பணிகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் மீட்பு குழுவினர் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் ஆங்காங்கே மரங்கள் விழுந்துள்ளதால்  வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மண் குவியல்களும், குப்பைகளும் குவிந்து கிடக்கின்றன. மழை வெள்ளத்தில் பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகின்றது. கடந்த ஜனவரியில் சுலேவேசி தீவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 70 பேர் பலியானார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்னர்  மேற்கு ஜாவா மாகாணத்தில் பருவமழை மற்றும் வெள்ளப் பெருக்கால் நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: