நியூசிலாந்து துப்பாக்கிச்சூட்டில் ஐந்து இந்தியர்கள் பலி: உறுதி செய்தது தூதரகம்

கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்தில் இரண்டு மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 இந்தியர்கள் பலியாகி உள்ளததை இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது. நியூசிலாந்தில் உள்ள கிரைஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள இரண்டு மசூதியில் கடந்த வெள்ளிக்கிழமை பலர் தொழுகையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் தொழுகையில் ஈடுபட்டு இருந்தவர்கள் மீது  துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 40 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பிரெண்டன் டாரன்ட்(28) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவன்.  துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து 9 இந்தியர்கள் மாயமானதாக இந்திய தூதரகம் தெரிவித்திருந்தது. ஆனால் இதனை அதிகாரப்பூர்வமாக தூதரகம் உறுதி செய்யவில்லை.

இந்நிலையில் மசூதிகளில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய தூதரகம் நேற்று உறுதி செய்தது. இது தொடர்பாக இந்திய தூதரக டிவிட்டர் பக்கத்தில், “துப்பாக்கிச்சூட்டில் 5 இந்தியர்கள்  உயிரிழந்தனர் என்ற செய்தியை மிக கனத்த இதயத்துடன் பகிர்கிறோம்” என பதிவிடப்பட்டுள்ளது. மெகபூப் கோகர், ரமீஷ் ஓரா, ஆசீப் ஓரா, அன்சி அலிபாவா மற்றும் ஒயாசிர் காதிர் ஆகியோர் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு விரைந்து விசா  வழங்கும்படி நியூசிலாந்து குடியுரிமை அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.நியூசிலாந்தில் சுமார் 2 லட்சம் இந்தியர் மற்றும் இந்திய வம்சாவளியினர் வசித்து வருகின்றனர். இவர்களில் 30 ஆயிரம் பேர் மாணவர்கள்.

ஏர்போர்ட்டில் மர்ம பொருளால் பரபரப்பு

நியூசிலாந்தின் கிரைஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள 2 மசூதிகளில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 40 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்து ஓரிரு நாட்களே ஆன நிலையில் இங்குள்ள துனிடின் விமான  நிலையத்தில் நேற்று சந்தேகப்படும் வகையில் மர்ம சாதனம் ஒன்று கிடந்தது. இந்த தகவல் பரவியதும் விமான நிலையம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு விமான நிலைய போலீசார் விரைந்தனர். மேலும் மர்மபொருள் என்ன, அதன் தன்மை என்ன என்பது குறித்து கண்டறிவதற்காக நிபுணர்கள் குழு வரவழைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விமான  நிலையம் நேற்று மூடப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: