×

புல்வாமா சம்பவத்தை கண்டித்து அமெரிக்காவில் இந்தியர்கள் ஆர்ப்பாட்டம்

ஹூஸ்டன்: புல்வாமா தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் இந்தியர்கள் போராட்டம் நடத்தினர்.அமெரிக்காவில் ஹூஸ்டன் வாழ் சர்வதேச இந்திய நண்பர்கள் சமூகம், ஹூஸ்டன் வாழ் புலம்பெயர்ந்த சர்வதேச காஷ்மீரி பண்டிட் அமைப்பு இணைந்து ஹூஸ்டன் நகரில் நேற்று போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில்,  புல்வாமா தாக்குதல் இந்திய இறையாண்மையின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இப்போராட்டத்தில் பங்கேற்ற 300க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர், `பாகிஸ்தான் தீவிரவாத நாடு,  தீவிரவாத கொள்கையை பாகிஸ்தான் கைவிட வேண்டும், காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என கோஷமிட்டனர்.

இதுகுறித்து போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் வீனா அம்பார்தர் கூறுகையில், ``கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய மண்ணில் பாகிஸ்தான் தீவிரவாதத்தை அவிழ்த்துவிட்டதில் ஆயிரக்கணக்கான வீரர்கள்  உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் ஒரு தீவிரவாத நாடு. தீவிரவாதத்தை தொழிலாக செய்கின்றனர். இதனால் உலக அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது’’ என தெரிவித்தார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Indians ,United States ,incident ,Pulwama , Contradicting, Pulwama incident, United States, Indians ,demonstrated
× RELATED எந்த நேரத்திலும் தாக்குதல்… இஸ்ரேல்,...