×

துளித் துளியாய்....

* ஐபிஎல் டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆட்டங்களில் மட்டுமே விளையாட வேண்டும் என கட்டுப்படுத்த முடியாது. ஒவ்வொரு வீரரும் தங்கள் உடல் திறனுக்கு ஏற்ப  அதை முடிவு செய்துகொள்ளலாம்’ என்று கேப்டன் விராத் கோஹ்லி கூறியுள்ளார்.
* ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்கள் கோஹ்லி, பூம்ரா இருவரும் நம்பர் 1 அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.
* சர்வதேச போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர், வீராங்கனைகளுக்கு விசா வழங்க இந்திய அரசு மறுத்ததை அடுத்து, ஜூனியர் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டித் தொடரை இந்தியாவில் இருந்து  விலக்கிக்கொள்வதாக உலக மல்யுத்த கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
* இலங்கை மகளிர் கால்பந்து அணியுடன் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் 5-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்ற இந்திய அணி, பி பிரிவில் முதலிடம் பிடித்து சாப் கோப்பை அரை இறுதிக்கு முன்னேறியது. இந்தியா  தொடர்ந்து 21 ஆட்டங்களில் தோற்காமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
* பாகிஸ்தான் யு-19 கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக முன்னாள் நட்சத்திரம் யூனிஸ் கான் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
* ஆசிய விளையாட்டு போட்டியில் செஸ் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதற்கு நட்சத்திர வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
* தென் ஆப்ரிக்க அணியுடன் நடந்த 5வது ஒருநாள் போட்டியில் 41 ரன் வித்தியாசத்தில் (டி/எல் விதி) தோற்ற இலங்கை அணி 0-5 என்ற கணக்கில் தொடரை முழுமையாக இழந்தது. இலங்கை 49.3 ஓவரில் 225 ஆல் அவுட்.  தென் ஆப்ரிக்கா 28 ஓவரில் 135/2 (மின் விளக்குகள் பழுது). அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி கேப் டவுனில் நாளை நடக்கிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Drop ,drops ....
× RELATED மழைநீர் வடியாததால் அறுவடைக்கு தயாரான...