தேர்தல் கெடுபிடிகளால் வெள்ளிப் ெபாருட்கள் உற்பத்தி 50% சரிவு

சேலம்:  தேர்தல் அதிகாரிகளின் ெகடுபிடியால் வெள்ளி உற்பத்தி 50 சதவீதம் சரிந்துள்ளதாக வெள்ளி வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். சேலத்தில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளி கால்கொலுசு, அரைஞாண் கொடி, குங்குமச்சிமிழ், வெள்ளி தட்டு, டம்ளர் உள்ளிட்டவைகள் வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தில் பல இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த தொழிலை நம்பி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் வழங்குவதை தடுக்க, சேலம் மாவட்ட எல்லை மற்றும் உள் பகுதிகளில் தேர்தல் அதிகாரிகள், பறக்கும்படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வெள்ளி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து சேலம் செவ்வாய்பேட்டை வெள்ளி வியாபாரிகள் கூறியதாவது: சேலத்தில் வெள்ளி தொழிலை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் உள்ளனர். 22 நிலையை கடந்து தான் கால் கொலுசு, அரைஞாண்கொடி உள்பட பல்வேறு வெள்ளிப்பொருட்கள் விற்பனைக்கு வருகின்றன. நாடாளுமன்ற தேர்தல் அமலுக்கு வந்தபின், கடந்த 11ம் தேதி முதல் தேர்தல் அதிகாரிகள், பறக்கும்படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபோன்ற சோதனையால், வெள்ளி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பீதியில் உள்ளனர். வெள்ளித்தொழிலில் கம்பி நீட்டுதல், பூ அடித்தல், டிசைன் போடுதல், மொட்டு அடித்தல் என 22 நிலைக்கு ஓர் இடத்தில் இருந்து மற்ெறாரு இடத்திற்கு கொண்டு சென்று, வெள்ளிப்பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றனர். தேர்தல் அதிகாரிகளின் கெடுபிடியால் ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு, வெள்ளிப்பொருட்களை கொண்டு செல்ல சிரமம் ஏற்படுகிறது. உற்பத்தி செய்யப்பட்ட வெள்ளிப்பொருட்களை தமிழகத்தில் பல பகுதிகளுக்கும், வெளி மாநிலங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். வாகன சோதனையில் வெள்ளிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதால், வெள்ளி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களுடைய உற்பத்தியை 50 சதவீதம் குறைந்துள்ளனர். மே 23ம் தேதி வரை, இதே கட்டுப்பாடு இருந்ததால், இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். வெள்ளி தொழில் சீராக நடக்க வெள்ளிப்பொருட்களை கொண்டு செல்லும் வியாபாரிகள் உரிய ஆவணம் காட்டினால் விடுவிக்க வேண்டும் என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: