கடைசி 2 ஆண்டு கற்றுத்தந்த பாடம் பெட்ரோல், டீசல் விலை தேர்தலில் எதிரொலிக்குமா?

புதுடெல்லி: கடைசி 2 ஆண்டுகளில் நிலவிய பெட்ரோல், டீசல் விலை ஆட்சி மாற்றத்துக்கு காரணமாக அமைந்துள்ளது. இதனால், இந்த முறையும் பெட்ரோல், டீசல் விலை மாற்றம் தேர்தல் முடிவுகளுக்கு முக்கிய காரணியாக இருக்கலாம் என கூறப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. இதற்கு முன்பு மாதம் 2 முறை விலை மாற்றம் செய்யப்பட்டது. சர்வதேச சந்தைக்கு ஏற்ப தினமும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யும் நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது 2012ம் ஆண்டு சராசரி பெட்ரோல் விலை 2012ம் ஆண்டில் மும்பையில் ரூ.78.57ஆக இருந்தது. அப்போது கச்சா எண்ணெய் பேரல் 107.97 டாலர். இதில் அரசு மானியம் 1,61,029 கோடி. 2013ம் ஆண்டு மும்பையில் பெட்ரோல் சராசரி விலை ரூ.83.62. அப்போது பேரல் ரூ.105.52 ஆக இருந்தது. இதில் அரசு மானியம் ரூ.1,43,738 கோடி. இந்த கடைசி 2 ஆண்டு பெட்ரோல் விைல உயர்வு ஆட்சி மாற்றத்துக்கு வழி வகுத்தது.

 இதுபோல், கடந்த 2017ம் ஆண்டு மும்பையில் பெட்ரோல் சராசரி விலை லிட்டர் ரூ.79.99ஆக இருந்தது. அரசு மானியம் ரூ.24,460 அப்போது பேரல் 56.43. 2018ல் மும்பையில் பெட்ரோல் சராசரி விலை லிட்டருக்கு ரூ.91.34. கோடி அரசு மானியம் ரூ.24,933 அப்போது கச்சா எண்ணெய் பேரல் 80.08 டாலர்.  அதோடு, ஐ.மு. கூட்டணி ஆட்சியின்போது கலால் வரி பெட்ரோலுக்கு ரூ.10, டீசலுக்கு ரூ.11 என இருந்தது. ஆனால், தற்போதைய மத்திய அரசு மானியத்தை குறைத்ததோடு, கலால் வரியை கிடுகிடுவென உயர்த்தியது. தற்போது பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.17.98 ஆகவும், டீசல் மீதான கலால் வரி ரூ.13.83 ஆகவும் உள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் கடைசி 2 ஆண்டுகளில் ஏற்பட்ட பெட்ரோல் விலை தேர்தலில் எப்படி எதிரொலித்ததோ, அதே நிலைதான் இப்போதும் மத்திய அரசுக்கு உருவாகியுள்ளது. கடந்த 2017 மற்றும் 2018 ஆண்டுகளில் அக்டோபர் மாதம்தான் பெட்ரோல் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. கச்சா எண்ணெய் விலை 2012, 2013ல் இருந்ததை விட குறைவாக இருந்தும் பெட்ரோல் விலை உயர்வு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுபோல் கடந்த 2 ஆண்டுகளின் பெட்ரோல், டீசல் விலை மாற்றம் தேர்தலில் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: