ஐடிபிஐ வங்கி பெயர் மாறுமா?

மும்பை: நஷ்டத்தில் சிக்கிய ஐடிபிஐ வங்கியின் 51 சதவீத பங்குகளை வாங்க எல்ஐசி முடிவு செய்தது. இதற்கான அமைச்சரவை ஒப்புதல் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 51 சதவீத பங்குகளை எல்ஐசி கைப்பற்றி, பெரும்பான்மை பங்குதாரராக மாறியது.

இதை தொடர்ந்து, இந்த வங்கியின் பெயரை எல்ஐசி ஐடிபிஐ என மாற்ற இந்த வங்கியின் நிர்வாக குழு பரிந்துரை செய்தது. ஆனால் இந்த பெயர் மாற்றத்தை ரிசர்வ் வங்கி ஒப்புக்கொள்ள வாய்ப்பில்லை எனவும், பழைய பெயரே நீடிக்கும் எனவும் ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: