அமெரிக்காவில் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்... உலகளவில் 470 கோடிகளுக்கு ஒருமுறை நடக்க உள்ளதாக தகவல்

வாஷிங்டன்: அமெரிக்காவில் பெண் ஒருவருக்கு 9 நிமிடத்தில் 6 குழந்தைகள் பிறந்துள்ளது. ஹூஸ்டனில் தெல்மா சியாகா என்ற பெண் பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, கடந்த வெள்ளிக்கிழமையன்று டெக்சாஸ் மகளிர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காலை 4. 50 மணிக்கு 2 ஜோடி ஆண் இரட்டையர்களும், அதையடுத்து 4. 59 மணிக்கு ஒரு ஜோடி பெண் இரட்டையர்களும் பிறந்தனர். குழந்தைகள் நலமாக இருந்தாலும், தொடர் சிகிச்சைக்காக மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். பெண் இரட்டையர்களுக்கு ஜீனா மற்றும் ஜுரியல் என்று அவர்களது தாயான தெல்மா சியாகா பெயரிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தாய் தெல்மா சியாகா மற்றும் குழந்தைகள் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 508 கிராம் முதல் 970 கிராம் வரை எடைகொண்ட 6 குழந்தைகளுக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உலகளவில் 470 கோடி பிரசவங்களுக்கு ஒருமுறை இதுபோன்று ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: