×

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வரும் ஜாவா பெராக்

1970களில் இருசக்கர வாகன சந்தையில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய ஜாவா நிறுவனம், மீண்டும் இந்திய வாகன சந்தையில் களமிறக்கப்பட்டுள்ளது. மஹிந்திரா குழுமத்தின் அங்கமாக செயல்படும் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் மூலம் ஜாவா, ஜாவா 42 மற்றும் ஜாவா பெராக் ஆகிய பைக்குகளை அறிமுகம் செய்தது. இதைத்தொடர்ந்து, ஜாவா மற்றும் ஜாவா 42 ஆகிய இரு பைக்குகளின் விற்பனை குறித்த தகவலை மட்டும் அப்போது அந்த நிறுவனம் வெளியிட்டது. ஆனால், ஜாவா பெராக் குறித்த எந்த தகவலையும் அந்த நிறுவனம் அறிவிக்கவில்லை. ‘’ஜாவா’’ மற்றும் ‘’ஜாவா 42’’ ஆகிய இரு மாடல் பைக்குகளின் விற்பனையில் மட்டுமே தற்போது அதிகம் கவனம் செலுத்தி வருவதால், பெராக் மாடல் குறித்த தகவலை பின்னர் தெரிவிப்பதாக ஜாவா நிறுவனம் அறிவித்தது. இந்த பைக்கை, புக் செய்ய பலர் போட்டி போட்டுக்கொண்டு முன் பணம் செலுத்தினார்கள். இவ்வாறு வாடிக்கையாளர்கள் போட்டி போட்டு புக் செய்ததால், தயாரிக்கப்பட்ட அத்தனை யூனிட்களும் மிக விரைவாக புக் செய்யப்பட்டு விட்டன.

 இதனால், 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை இவ்விரு மோட்டார் சைக்கிள்களுக்கான புக்கிங்கும் முடிந்துவிட்டதாக ஜாவா நிறுவனம் அறிவித்தது. பைக்கை புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு பிப்ரவரி மாதம் டெலிவரி செய்யப்படும் என முன்னதாக ஜாவா நிறுவனம் அறிவித்திருந்தது.தற்ேபாது  ஜாவா பெராக் மாடல் பைக்கிற்கான புக்கிங் இந்த ஆண்டின் இறுதிக்குள் தொடங்கப்படும் என அந்த டுவீட் மூலம் ஜாவா தெரிவித்துள்ளது.
ஜாவா பெராக்கில் அதிக சக்தி வாய்ந்த இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 27பிஎச்பி பவர் மற்றும் 28 என்எம் டார்க்யூ திறனை தரும். 293 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் கொண்டுள்ள ஜாவா மற்றும் ஜாவா 42 பைக்குகளைவிட, அதிக சக்தி வாய்ந்ததாக இந்த இன்ஜின் உள்ளது. ஜாவா பெராக் சக்திக்கு ஏற்ப அதன் விலையும் சற்று அதிகமாக இருக்கிறது. ரூ.1 லட்சத்து 89 ஆயிரம் என எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு சாலை பாதுகாப்பு அம்சங்களுக்கு ஏற்றவாறு ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியுடன் உருவாகியுள்ள இந்த பைக், இந்திய இருசக்கர வாகன சந்தையில் மீண்டும் ஓர் புரட்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jawahar Berak , Java perak
× RELATED ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை; இன்று...