×

வருகிறது டாடா அல்ட்ராஸ் கார்

ஜெனிவா நகரில் துவங்கியுள்ள சர்வதேச மோட்டார் ஷோவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 4 புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. டாடா அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார், டாடா ஹாரியர் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடல், புதிய மினி எஸ்யூவி மாடல் மற்றும் புதிய மின்சார காரின் கான்செப்ட் மாடலை காட்சிப்படுத்தியுள்ளது. டாடா நிறுவனத்தின் புதிய இம்பேக்ட் 2.0 டிசைன் தாத்பரியங்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார், முதலில் பெட்ரோல், டீசல் மாடலில் வர இருக்கிறது.

இதைத்தொடர்ந்து, மின்சார மாடலும் கொண்டுவரப்பட இருக்கிறது. இது நிச்சயம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வர்த்தகத்தில் முக்கிய பங்களிப்பை வழங்க வல்லதாக இருக்கும். டாடா அல்ட்ராஸ் கார், இந்த ஆண்டிலேயே விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. ஆனால், டாடா அல்ட்ராஸ் மின்சார கார் இந்தியாவில் அறிமுகம் செய்ய ஓரிரு ஆண்டுகள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tata , Tata, altras, car,
× RELATED சொல்லிட்டாங்க…