×

கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய டாடா ஹெக்ஸா

கடந்த மாதம் புத்தம் புதிய டாடா ஹாரியர் எஸ்யூவி ரக கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட ஒரே விலை ரகத்தில் வந்த ஹாரியர் கார், ஹெக்ஸா காருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனை உணர்ந்து, ஹெக்ஸா காரின் விலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் குறைத்தது. எனினும், அதற்கு போதிய பலன் கிடைக்காது எனக்கருதி இப்போது ஹெக்ஸா காரில் கூடுதல் சிறப்பம்சங்களை சேர்த்து களமிறக்கி இருக்கிறது டாடா நிறுவனம். தோற்றத்தில் சில மாறுதல்கள் மற்றும் கூடுதல் வசதிகளுடன் இப்புதிய ஹெக்ஸா வந்துள்ளது. புதிய இரட்டை வண்ண கலவைகளில் டாடா ஹெக்ஸா அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் எக்ஸ்டி, எக்ஸ்டி 4 வீல் டிரைவ், எக்ஸ்டிஏ ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில், இந்த இரட்டை வண்ண கலவை தேர்வுகள் வழங்கப்படுகிறது. எக்ஸ்எம் வேரியண்ட்டில் இரட்டை வண்ண கலவை தேர்வு இல்லை. இதுதவிர்த்து, புதிய வடிவமைப்பிலான அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. 17 அங்குல சார்கோல் என்ற வண்ணத்திலான அலாய் வீல், எக்ஸ்டி, எக்ஸ்டி 4 வீல் டிரைவ் மாடல்களில் கிடைக்கும். மற்றொரு மாடலானது 19 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல் எக்ஸ்டிஏ வேரியண்ட்டில் கிடைக்கும். புதிய 7 அங்குல திரையுடன்கூடிய ஹார்மன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

ஹார்மன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலியை சப்போர்ட் செய்யும். மேலும், வீடியோ பிளேபேக் வசதி, கனெக்ட் நெக்ஸ்ட், எமர்ஜென்சி அசிஸ்ட், பார்க் அசிஸ்ட் உள்ளிட்ட பல வசதிகளை அளிக்கும். மேலும், ஹார்மன் தொடுதிரை இன்போடெயின்மென்ட் சிஸ்டம் இப்போது எக்ஸ்டி, எக்ஸ்டி 4 வீல் டிரைவ், எஸ்எம், எக்ஸ்எம்ஏ, எக்ஸ்எம் பிளஸ் ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. மூட் லைட்டிங் சிஸ்டமும் இந்த காரின் முக்கிய சிறப்பம்சமாக உள்ளது. இன்ஜின் ஆப்ஷனில் மாற்றமில்லை. இந்த காரில் இருக்கும் 2.2 லிட்டர் வேரிகோர் 400 டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 154 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். இந்த காரில், இதுவரை வழங்கப்பட்ட எக்ஸ்இ என்ற பேஸ் வேரியண்ட் விற்பனையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இனி, எக்ஸ்எம் வேரியண்ட்தான் அடிப்படை வசதிகள் கொண்ட மாடலாக இருக்கும். இந்த மாடல் ரூ.14.38 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tata Hexa , Tata Hexa
× RELATED சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின்...