மோடி ஒரு ‘சூடோ சவுகீதார்’ சந்திரபாபு நாயுடு கடும் விமர்சனம்

அமராவதி: பிரதமர் மோடி ஒரு ‘சூடோ சவுகீதார்’ என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விமர்ச்சித்துள்ளார். ஆந்திர தலைநகர் அமராவதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு அளித்த பேட்டியில் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி குற்றவாளிகளை காப்பாற்றும் போலி காவலாளி (சூடோ சவுகீதார்). குற்றவாளிகளை பாதுகாக்கும் சோகீதார்தான் நீங்கள்.ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மீதான சட்டவிரோத சொத்து குவிப்பு வழக்கில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடை சட்டத்தின்கீழ் புதிய நோட்டீஸை வழங்க சிபிஐக்கு கடந்த 2017ல் மத்திய அமலாக்கத்துறை இயக்குநரகம் கடிதம் எழுதியது. இந்த அறிவுறுத்தல் கடிதத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சிபிஐ கிடப்பில் போட்டுவிட்டது, ஏன் என்று தெரியுமா? பிரதமர் மோடி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை பாதுகாப்பதால்தான்.

இதேபோல், சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்திற்கான அனுமதியை ரத்து செய்வதற்கு தெலங்கானா அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதற்கு காரணம், மோடி, தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் இடையிலான ஒரு ரகசிய உடன்பாடுதான். ஜெகன் மோகன் ரெட்டி, ஒட்டுமொத்தமாக மோடியிடம் சரணாகதி அடைந்துவிட்டார். சந்திரசேகர ராவ் அவரை வழக்குகளில் இருந்து விடுவிக்க உதவி செய்கிறார். இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED ஆந்திராவில் மீண்டும் ஆட்சியை தக்க வைப்பாரா சந்திரபாபு நாயுடு