மோடியைப்போல் பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு அளிக்கமாட்டேன்: திருச்சூரில் ராகுல்காந்தி பேச்சு

திருவனந்தபுரம்: ‘‘மோடியை போல் நான் மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளிக்க மாட்டேன்’’ என்று திருச்சூரில் மீனவர்கள் மத்தியில் ராகுல்காந்தி பேசினார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேரளாவில் தீவிர பிரசாரம் மேற்ெகாண்டுள்ளார். நேற்று காலை திருச்சூர் அருகே திருப்ரையாரில் மீனவர்கள் நாடாளுமன்றம் என்ற நிகழ்ச்சியில் அவர் கலந்துகெண்டார். ஏராளமான மீனவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் ராகுல்பேசியதாவது: கேரளாவுக்காகவும் நாட்டுக்காகவும் நீங்கள் ஏராளமான சேவைகளை செய்துள்ளீர்கள். ஓகி புயல் மற்றும் வெள்ளம் ஏற்பட்டபாேது கேரள மக்களுக்கு நீங்கள் செய்த சேவையை மறக்க முடியாது. மக்களுக்கு ஒரு ஆபத்து என்றால் நீங்கள் விரைந்து எந்த பிரதிபலனும் பார்க்காமல் வீதிக்கு வருகிறீர்கள். ஆனால் உங்கள் நலனுக்கு உறுதுணையாக இருக்க யாரும் இல்லை. இதுபோல் மீண்டும் நடைபெறாமல் இருக்க காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மீனவர்களுக்காக தனி துறை அமைக்கப்படும்.

உங்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க நடவடிக்கை எடுப்பேன். இது என் உண்மையான வாக்குறுதியாகும். மோடியை போல் நான் பொய்யான வாக்குறுதிகளை அளிக்கமாட்டேன். மோடியை விளம்பரப்படுத்துவதற்காக 15 கோடீஸ்வரர்கள் களத்தில் உள்ளனர். அவர்களுக்காக தான் மோடி பாடுபடுகிறார்.இவ்வாறு அவர் பேசினார்.

தொண்டர்கள் குடும்பத்திற்கு ஆறுதல்
திருச்சூரில் இருந்து கண்ணூர் சென்ற ராகுல்காந்தி, சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட இளைஞர் காங்கிரஸ் தொண்டர் சுஹைதின் உறவினர்களை விமான நிலையத்தில் சந்தித்து பேசினார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் காசர்கோடு மாவட்டம் பெரியா சென்ற அவர் சமீபத்தில் கொல்லப்பட்ட இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கிருபேஷ், சரத்லால் ஆகியோரின் வீடுகளுக்கு சென்று அவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் மாலையில் கோழிக்கோடு சென்ற அவர் கடற்கரையில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED மோடி அளித்த வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றவில்லை: திமுக தலைவர் ஸ்டாலின்