டெல்லி என்ன உங்கள் குடும்ப சொத்தா? கெஜ்ரிவால் ஆவேசம்

புதுடெல்லி: டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து பெற்று தரும் விவகாரம் குறித்து, ஆம் ஆத்மி நிறுவனரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் கூறியது: எந்த ஒரு தனி நபருக்கோ அல்லது கட்சிக்கோ தலைநகர் டெல்லி சொந்தமானது அல்ல. மாநிலத்துக்கு முழு அந்தஸ்து பெறுவது பற்றி மக்கள் தீர்மானிப்பார்கள். டெல்லிவாசிகளுக்கு 70 ஆண்டுகளாக துரோகம் இழைக்கப்பட்டு வருகிறது. ஏமாற்றப்பட்டு வந்துள்ளனர். முழு அந்தஸ்து கோரிக்கையே மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் தாரக மந்திரமாக முழங்கப்படும். டெல்லிக்கு முழு அந்தஸ்து வழங்க முடியாது என பாஜ தலைவர் மனோஜ் திவாரி கூறுகிறார்.

நான் கேட்கிறேன், டெல்லி என்ன உங்கள் குடும்ப சொத்தா? முழு அந்தஸ்து கிடைக்காது என சொல்வதற்கு நீங்கள் யார்? மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி கோரியபோது மாநிலம் பிரிக்கப்பட்டது. நர்மதை அணை விவகாரத்தில் குஜராத்தில் நரேந்திர மோடி போராட்டம் நடத்தியதால், குஜராத் இரண்டானது. இதெல்லாம் திவாரிக்கு தெரியாதா? ஜனநாயகம் வேண்டி போராடியது நமது சுதந்திரத்திற்கு பாடுபட்ட தியாகிகள் தான். மோடியோ அல்லது திவாரியின் அப்பாவோ அல்ல. இவ்வாறு கெஜ்ரிவால் ஆவேசமாக தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED கோபத்தை கையாள்வது எப்படி?!