2 மாதங்களில் பத்திரப்பதிவுக்கு வந்த 20,000 ஆவணங்கள் திருப்பி அளிக்கப்படவில்லை

* மேல்முறையீட்டில் காத்திருக்கும் 6049 ஆவணங்கள் * பரபரப்பு தகவல்கள் அம்பலம்

2 மாதங்களுக்கு முன்பு பத்திரப்பதிவுக்கு வந்த 20 ஆயிரம் ஆவணங்கள் திருப்பி அளிக்கப்படாமல் இருந்தது தற்போது தெரிய வந்துள்ளது. அதேபோன்று வழிகாட்டி மதிப்பு நிர்ணயிப்பது தொடர்பாக மேல்முறையீட்டிற்கு 6 ஆயிரம் ஆவணங்கள் நிலுவையில் உள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 575 சார்பதிவாளர்கள் அலுவலகங்கள் உள்ளன. இதன் மூலம், வீடு, விளைநிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. இவ்வாறு பதிவு செய்ய வரும் ஆவணங்கள் வழிகாட்டி மதிப்பீடு குளறுபடி பிரச்னையால் மேல்முறையீட்டிற்கு விண்ணப்பிக்கப்படுகிறது. அவ்வாறு விண்ணப்பிக்கப்படும் ஆவணங்களுக்கு 40 நாட்களுக்குள் மதிப்பு நிர்ணயம் செய்ய வேண்டும். ெதாடர்ந்து அந்த மதிப்பின் அடிப்படையில் பத்திரம் பதிவு செய்ய வேண்டும். ஆனால், இந்த ஆவணங்கள் மதிப்பு நிர்ணயிக்காமல் வைக்கப்படுவதால் பதிவுத்துறைக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஒவ்வொரு மாதமும் இத்தனை ஆவணங்களில் மதிப்பு நிர்ணயம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இலக்கை அடைய எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குறிப்பாக, கடந்த மாதத்தில் சென்னை மண்டலத்தில்  300 ஆவணங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 147 ஆவணங்களும், கோவையில் 150ல் 138ம், கடலூரில் 200ல் 48ம், மதுரையில் 80ல் 33ம், சேலத்தில் 100ல் 88ம், தஞ்சாவூரில் 40ல் 27ம், நெல்லையில் 200ல் 44ம், திருச்சியில் 200ல் 89ம், தூத்துக்குடியில் 14ல் 17ம், வேலூரில் 80ல் 97ம், விருதுநகரில் 10ல் 24ம் இலக்கு அடைந்துள்ளது. இதே போன்று நடப்பாண்டில் அனைத்து இனங்களையும் சேர்த்து சென்னையில் 1171 ஆவணங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 6049 ஆவணங்கள் நிலுவையில் உள்ளன.

அதேபோன்று, சென்னையில் 50 சதவீத ஆவணங்களும், வேலூரில் 64 சதவீதமும், தஞ்சையில் 65 சதவீதமும், மதுரையில் 66 சதவீத ஆவணங்கள் மட்டுமே ஆவணபதிவு தினத்தன்று திரும்ப வழங்கப்பட்டுள்ளது.  சென்னையில் 3 நாட்களுக்கு பிறகு 11,405 ஆவணங்களும், மதுரையில் 5567 ஆவணங்களும் 3 நாட்களுக்கு பிறகே திரும்ப அளிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 17ம் தேதி முதல் பிப்ரவரி 28ம் தேதி வரையிலான சென்னை மண்டலத்தை பொறுத்து 6218 ஆவணங்களும், மதுரை மண்டலத்தை பொறுத்து 3368 ஆவணங்களும், கோவை மண்டலத்தில் 2745 ஆவணங்களும் திரும்ப அளிக்கப்படாமல் உள்ளது. குறிப்பாக, மாநிலம் முழுவதும் 19,877 ஆவணங்கள் திரும்ப வழங்கப்படவில்லை. இந்த ஆவணங்களை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவுத்துறை ஐஜி பாலச்சந்திரன் சார்பதிவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.இந்நிலையில் அந்த ஆவணங்கள் பொதுமக்கள் லஞ்சம் கொடுக்காத காரணத்தால் தான் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED பணம் கட்டி ஏமாற்றமடைந்தோர் உரிய...