புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் திமுக போட்டியிடும்: முதல்வர் நாராயணசாமி பேட்டி

சென்னை: புதுச்ேசரி தட்டாஞ்சாவடி தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுகிறது என்று புதுச்ேசரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.தமிழகம் மற்றும் புதுச்சேரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகிறது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகளும் புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ேநற்று சந்தித்தார்.

 இதன் பிறகு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: புதுச்சேரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் யார் போட்டியிடுவார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி  தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எங்களது கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற பாடுபடுவோம். எங்கள் கூட்டணி பலமான கூட்டணியாக உள்ளது. அதிமுக, பாஜக  கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணியாக உள்ளது. எங்களது  கூட்டணி 40 தொகுதியிலும் நிச்சயம் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED புதுச்சேரி இடைத்தேர்தலில் திமுக வெற்றி