காட்டு மாடு முட்டி கல்லூரி முதல்வரின் கணவர் பரிதாப பலி

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அட்டுவம்பட்டி வெட்டுவரை பகுதியை சேர்ந்தவர் ஜெபராஜ் (55). கொடைக்கானல் போட் கிளப் படகு பயிற்சியாளர். இவரது மனைவி சந்திரமணி ஜெபராணி  கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக கல்லூரி முதல்வராக பணியாற்றி வருகிறார். 2 குழந்தைகள் உள்ளனர்.

நேற்று பகல் 2 மணியளவில் ஜெபராஜின் தோட்டத்திற்குள் காட்டு மாடுகள் புகுந்தன. இவற்றை ஜெபராஜ் விரட்ட முயன்றபோது, கூட்டத்தில் இருந்த ஒரு காட்டு மாடு திடீரென்று ஜெபராஜை முட்டித்தள்ளியது. தனது கொம்பால்  அவரது வயிற்றில் குத்தி சில மீட்டர் தூரம் இழுத்துச்சென்றது. இதில் பலத்த காயமடைந்த ஜெபராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED தற்கொலைக்கு தூண்டிய கணவர் கைது