தேர்தல் தொடர்பான வழக்குகள் சென்னையில் மட்டுமே விசாரிக்கப்படும் : உயர்நீதிமன்றம் அறிவிப்பு

சென்னை: தேர்தல் தொடர்பான வழக்குகள் சென்னையில் மட்டும் விசாரிக்கப்படும் என சென்னை ஐகோர்ட் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் கமி‌ஷன் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் மக்களவை தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பான வழக்குகள் சென்னை நீதிமன்றத்தில் மட்டுமே விசாரிக்கப்படும், மேலும் ஐகோர்ட்டில் மட்டுமே தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியது.

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தாலும் சென்னையில் மட்டுமே விசாரணை என 2011-ல் முடிவு செய்யப்பட்டது. 2011 முடிவை மார்ச் 12-ம் தேதி தலைமை நீதிபதி அமர்வில் இந்திய தேர்தல் ஆணையம் நினைவூட்டியது. அதன் அடிப்படியில் சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு விசாரிக்கிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED குமரி மருத்துவக்கல்லூரியில்...