மும்பையில் ரயில் நிலைய நடைமேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து: 4 பேர் பலி... 34 பேர் காயம்

மும்பை : மும்பையில் ரயில் நிலைய நடைமேம் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் இந்த விபத்தில் 34 பேர் காயமடைந்துள்ளனர். மும்பையின் முக்கிய பகுதியான
சத்ரபதி சிவாஜி ரயில் நிலைய நடைமேம்பாலம் இன்று மாலை இடிந்து விழுந்தது. பயணிகள் நெரிசல் அதிகமாக இருக்கும் நேரத்தில் நடைமேம்பாலம் இடிந்து விழுந்ததால் பணிகள் பலர் காயமடைந்தனர்.
தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்க்கு வந்த தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் விபத்தில் காயமடைந்தவர்களை புனித ஜார்ஜ் மருத்துவமனையில் சிகிச்சை அழைத்து செல்லப்பட்டனர்.

இதனை தொடர்ந்து ஈடுபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க அந்தேரி மையத்தில் இருந்து தேசிய பேரிடர்  மீட்புப் படை விரைந்துள்ளது. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விபத்து காரணமாக அப்பகுதியில் முழுவதும் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. ஏற்கனவே 2017-ல் மும்பையில் எல்பின்ஸ்டன் பாலம் விழுந்ததில் பலர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED சாலை விபத்தில் முதியவர் பலி இளைஞர்கள் இருவர் காயம்