மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் தொகுதிகள் குறித்து திமுக - காங்கிரஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்து

சென்னை: மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் தொகுதிகள் குறித்து திமுக - காங்கிரஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. தமிழகத்தில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் எந்தெந்த தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது என்பது குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் , காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். திமுக கூட்டணியில் 10 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

10 தொகுதிகளில் புதுச்சேரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கென்று ஒதுக்கப்படு்ம் என ஏற்கனவே முடிவான நிலையில் மீதமுள்ள 9 தொகுதிகள் எவை காங்கிரஸ் கட்சிக்கு என்பது குறித்து இரு கட்சிகளும் கலந்தாலோசித்து முடி செய்து தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. கே.எஸ்.அழகிரி தலைமையிலான காங்கிரஸ் கட்சி குழுவும், துரைமுருகன் தலைமையிலான திமுக குழுவும் பேச்சுவார்த்தை நடத்தின. இந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சிக்கான மீதமுள்ள 9 தொகுதிகள் முடிவு செய்யப்பட்டு உடன்பாடு எட்டப்பட்டது.

கே.எஸ்.அழகிரி பேட்டி: சென்னை: திமுகவுடன் தொகுதி பங்கீடு முடிவானது, இனிமையான முறையில் தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது என  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள் முடிவானது. வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகளை பெற்றுள்ளோம். போட்டியிடும் தொகுதிகள் குறித்து நாளை திமுக தலைவர் அறிவிப்பார். காங்கிரஸ் கட்சியில் விருப்பமனு பெற்ற பிறகு வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.

ராகுல் எதிர்மறையாக பேசியதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியதற்கு கே.எஸ்.அழகிரி விளக்கம்; தம் மீதும் தம் குடும்பம் மீதும் வெறுப்பை காட்டிய மோடிக்கு அன்பை காட்டவே கட்டிப்பிடித்ததாக ராகுல் காந்தி கூறியதாக கூறினார். பிரதமராக பல முறை மன்மோகன் சிங் வாய்ப்பு அளித்த போதும் ராகுல் காந்தி ஏற்க மறுத்தார். பாஜக கூட்டணியில் தமாகா சேர்ந்திருப்பது வருத்தப்பட வேண்டிய ஒன்று. எனவும் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED இடைத்தேர்தலில் திமுக அதிக இடங்களில்...