×

உலகம் பலவிதம்

ஓ... சம்பா!
பிரேசிலின் சா பாலோ நகரில் பாரம்பரிய சம்பா நடன திருவிழா கடந்த 1ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. தினந்தோறும் பல்வேறு அலங்கார வாகன அணிவகுப்புடன் சம்பா கலைஞர்கள் நடனமாடி பார்வையைாளர்களை உற்சாகப்படுத்தினர். இதில், டிராகாயஸ் டா ரியல் சம்பா நடனப்பள்ளி மாணவர்கள் தங்களின் அலங்கார வானத்துடன் நடனமாடி வந்த காட்சி.

மனைவியோடு ஓட்டம்
இங்கிலாந்தின் டோர்கிங் நகரில் மனைவியை சுமந்தபடி ஓடும் ஓட்டப்போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான ரேசில் பங்கேற்ற கணவன்மார்கள், மனைவியை சுமந்தபடி, தடைகளை தாண்டி சீறிப்பாய்கின்றனர்.

வட போச்சே...
இங்கிலாந்தின் வின்செஸ்டர் நகரில் நடந்த ‘பான்கேக் ரேஸ்’ ஓட்டப் போட்டி நடந்தது. இதில், சமையல் பானில் தட்டையான இனிப்பு ரொட்டியை வைத்து ஓடி, முதலில் வர வேண்டும். அபாரமாக ஓடிய சிறுவன் ஒருவனின் பானிலிருந்து துரதிஷ்டவசமாக இனிப்பு ரொட்டி கீழே விழுகிறது.

யார் பெத்த புள்ளையோ!
பெலாரஸ் நாட்டின் மின்ஸ்க் நகரின் சுரங்க நடைபாதையில் டிப்டாப்பாக டிரஸ் அணிந்திருக்கும் ஒரு இளம்பெண் வயலின் வாசிக்க, அவருக்கு இனாமாக ரூபாய் நோட்டை போட்டுச் செல்கிறார் மற்றொரு பெண்.

மலேசியாவின் கோலாம்பூரில் இருந்து 239 பேருடன் பறந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்எச் 370 தென் சீன கடல் மீது சென்ற போது மாயமானது. கடலில் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் அந்த விமானம் என்ன ஆனது என்பது இதுவரை மர்மமாகவே உள்ளது. பல ஆண்டு தேடுதலில் விமானத்தின் சில துண்டுகள் மட்டுமே கிடைத்தன. இந்த கோர விபத்தின் 5ம் ஆண்டு நினைவு தினம் கடந்த 3ம் தேதி கோலாலம்பூரில் அனுசரிக்கப்பட்டது. அப்போது, தான்சானியாவின் பெம்பா தீவில் மீட்கப்பட்ட விமானத்தின் உடைந்த பகுதி காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : world , Different world
× RELATED தண்ணீரை விலை கொடுத்து வாங்குவது நூற்றாண்டின் மிகப்பெரும் அவலம்