உழைக்கும் பெண்களின் உரிமையை பாதுகாப்போம் : இன்று உலக மகளிர் தினம்

ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட மார்ச் 8 பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும்.  சர்வதேச மகளிர் தினம் இன்று உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது என்றே குறிப்பிட வேண்டும். பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த 18ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர். வீட்டு வேலைகளை செய்வதற்காக பெண்களை வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்திருந்தனர். பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்ப கல்வி கூட தரப்படாமல் மறுக்கப்பட்டது. 1857ம் ஆண்டு நிலக்கரி சுரங்கங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பணி வாய்ப்பு தரப்பட்டது. பெண்களால் தொழிற்சாலைகளிலும் வேலை செய்ய முடியும் என்பது உலகுக்கு உணர்த்தப்பட்டது. ஆண்களுக்கு நிகராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததே தவிர, ஊதியத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. இதனால் அமெரிக்கா முழுவதும் பெண் தொழிலாளர்கள் கிளர்ச்சியில் இறங்கினர். . கடந்த 1910ம் ஆண்டு டென்மார்க் நாட்டில், பெண்கள் உரிமை மாநாடு நடந்தது.

இதில் ஜெர்மனி கம்யூனிஸ்ட் தலைவர் கிளாரே செர்கினேம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தினார். இதையடுத்து கடந்த 1921ம் ஆண்டு முதல் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1975ம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக ஐ.நா பிரகடனப்படுத்தியது. தற்போது ரஷ்யா, உக்ரைன், உஸ்பெகிஸ்தான், வியட்நாம், ஆப்கானிஸ்தான், ஆர்மேனியா, அஜர்பைஜான், பெலாரஸ், புர்கினியா பெசோ, கம்போடியா, கியூபா, எரித்திரியா, கஜகஸ்தான், மால்டோவா, மங்கோலியா, மான்டேநெக்ரோ, தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான் ஆகிய நாடுகளில் சர்வதேச மகளிர் தினத்துக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. இவ்வாண்டு மகளிர் தின கருப்பொருளாக ‘’சமநிலை தரும் நலவாழ்வு’’ என்பதை முழக்கமாக ஐ.நா சபை அறிவித்தது. பெண்ணியவாதிகளின் உலகளாவியப் போராட்டங்கள் அனைத்தும் பாலின சமநிலையை முன்னிறுத்தியே நடக்கின்றன. சமநிலையின்மையின் பாதிப்புகளை உணர்ந்த உலகம், சமநிலையைக் கொண்டாடத் தொடங்கிவிட்டது. பாலின சமநிலையை நோக்கி உலகம் நகரத் தொடங்கிவிட்டதால், வருங்காலம் நம்பிக்கையளிப்பதாக உள்ளது. எனவே அனைவரும் பெண்களின் உரிமையை பாதுகாப்பது மட்டுமின்றி பெண்மையை போற்ற வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: