புதிய ஹோண்டா சிவிக்

கடந்த 2013ம் ஆண்டு ஹோண்டா சிவிக் கார், இந்தியாவிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டது. விற்பனை சுணங்கியதால் இந்த முடிவை ஹோண்டா கார் நிறுவனம் எடுத்தது. இந்நிலையில், முற்றிலும் புதிய தலைமுறை ஹோண்டா சிவிக் காரை இந்தியாவில் களமிறக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, 10வது தலைமுறை ஹோண்டா சிவிக் கார், வரும் மார்ச் 7-ம்தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த காருக்கு அதிகாரப்பூர்வமாக முன்பதிவும் துவங்கப்பட்டு விட்டது. ரூ.31,000 முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம்.

ஏற்கனவே விற்பனையில் இருந்த மாடலில் இருந்து முற்றிலும் புதிய டிசைனுக்கு மாறி விட்டது புதிய ஹோண்டா சிவிக் கார். எல்இடி ஹெட்லைட், முன்புறத்தில் புதிய கிரில் அமைப்பு, ‘’சி’’ வடிவிலான எல்இடி டெயில் லைட் என ஒட்டுமொத்த தோற்றமும் மிக கவர்ச்சிகரமாக இருக்கிறது. 4,656 மி.மீ நீளமும், 1,799 மி.மீ அகலமும், 1,433 மி.மீ உயரமும் கொண்டது. இதன் வீல் பேஸ் 2,700 மி.மீ. இதனால், உட்புறத்தில் சிறந்த இடவசதியை அளிக்கிறது. இந்த காரில், 7.0 அங்குல டிஎப்டி திரையுடன்கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் 7 அங்குல தொடுதிரையுடன்கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
Advertising
Advertising

இதுதவிர, 2 ஸோன் கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, புஷ் பட்டன் ஸ்டார்ட் உள்ளிட்ட பல வசதிகளும் உள்ளன. முன்புறத்தில் டியூவல் ஏர்பேக், பக்கவாட்டில் கர்டெயின் ஏர்பேக் என 6 ஏர்பேக்குகள் உள்ளன. டிராக்க்ஷன் கன்ட்ரோலுடன் ஒருங்கிணைந்து செயல்படும் வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி சிஸ்டம், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த காரில், 1.8 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஜின் 139 பிஎச்பி பவரையும், 174 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். டீசல் மாடலில் இருக்கும் 1.6 லிட்டர் இன்ஜின் அதிகபட்சமாக 118 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வழங்கும். பெட்ரோல் மாடலில் சிவிடி கியர்பாக்ஸும், டீசல் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும் உள்ளன. இந்த கார், 171 மி.மீ கிரவுண்ட் கிளிரயன்ஸ் பெற்றிருக்கிறது. இந்த காரில் 430 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட் ரூம் இடவசதி உள்ளது. இந்த கார், டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ், ஹூண்டாய் எலான்ட்ரா, ஸ்கோடா ஆக்டேவியா உள்ளிட்ட கார்களுடன் போட்டி போடும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: