புதிய ஸ்டைலுடன் களமிறங்கும் பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் பைக்

பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் தனது 2019 பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் பைக்கை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.  

2019 பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் என்ற இந்த பைக் மாடலை, பிஎம்டபிள்யூ நிறுவனம் கடந்த வருடம் இஐசிஎம்ஏ 2018 மோட்டார்சைக்கிள் வாகன ஷோவின்போது அறிமுகம் செய்தது. இந்த மேம்படுத்தப்பட்ட மாடல், குறைந்த எடை, அதிக சக்தி மற்றும் ஸ்போர்டி டைப் தோற்றம் கொண்டது. அத்துடன், மேலும் பல அம்சங்களை கொண்டு அப்கிரேடு செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கின் வரவு, அதன் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பைக்கில் 999சிசி பவர் கொண்ட இன்-லைன்-நான்கு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 207 குதிரைத்திறன், 13,500 ஆர்.பி.எம். வெளிப்படுத்தும். இந்த மாடல், முந்தைய மாடலை காட்டிலும் 8 குதிரைத்திறன் கூட்டப்பட்ட பவருடன், மாற்றமில்லாத டார்க்யூ திறனுடன் அப்கிரேடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதில் மிகப்பெரிய மாற்றமாக பவர் ட்ரெயின் தொழில்நுட்பத்தை கூடுதலாக பிஎம்டபிள்யூ ஷிப்ட்கேம் இணைத்துள்ளது. இது, வேரியபிலான வால்வ் டைமிங் மற்றும் வால்வ் ஸ்டிரோக் உள்ளிட்டவற்றை சிறப்பானதாக மாற்றியமைக்கும்.
Advertising
Advertising

இதன்மூலம், வாகன ஓட்டிகள் சிறந்த ரைடு அனுபவத்தை அனுபவிக்க முடியும். இந்த பைக் மாடலில், சிக்ஸ்-ஆக்ஸிஸ் எனப்படும் எலெக்ட்ரானிக் சிஸ்டமும் அப்கிரேடு செய்யப்பட உள்ளது. இது ஏபிஎஸ் மற்றும் டைனமிக் டிராக்ஸன் கன்ட்ரோலை சிறப்பாக இயக்க உதவும். இந்த பைக்கில், மழை, சாலை, டைனமிக் மற்றும் ரேஸ் ஆகிய நான்கு விதமான ரைட் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மோடுகளை 6.5 இன்ச் கொண்ட டிஜிட்டல் திரையை கொண்டு இயக்கிக்கொள்ளலாம். இதுதவிர, பைக்கின் அதிகப்படியான எடையை குறைக்கும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 197 கிலோ எடையுள்ள அந்த பைக்கில் தற்போது 11 கிலோ வரை குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவ்வாறு, அதன் சேஸிஸ் மற்றும் இன்ஜின்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அப்கிரேடு செய்யப்பட்ட இந்த பைக் மாடல், ரூ.18.50 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: