×

பாகிஸ்தானின் தாக்குதல்களும்.... அலறவிட்ட இந்தியாவின் பதிலடிகளும்... 1947 முதல் நடைபெற்ற போர் விவரங்கள்...

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே முதல் போர் இரண்டு நாடுகளும் சுதந்திரம் பெற்ற இரண்டு மாதங்களில், காஷ்மீருக்காக தொடங்கியது. 1948-ம் ஆண்டு வரை நீடித்த இந்த போரில் பாகிஸ்தான் படைகள் பெரும் இழப்பை சந்தித்தன. எனினும் ஐ.நா. தலையிட்டு இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வந்தன. இந்த போரால் காஷ்மீர் இந்தியாவின் வசமானது.

இரண்டாவது போரும் காஷ்மீர் விவகாரம் தொடர்பாகவே தொடங்கியது. 1961-ம் ஆண்டில் சீனாவுடன் நடைபெற்ற போரில் இந்தியா தோல்வியடைந்திருந்தது. இந்நிலையில் இந்தியாவை எளிதில் வீழ்த்தி விடலாம் என நினைத்த பாகிஸ்தான் பிரதமர் ஐயூப் கான் 1965-ம் ஆண்டில் பாகிஸ்தான் படைகளை இந்தியாவிற்குள் மாறுவேடத்தில் ஊடுருவ வைத்தார். ஆனால் இந்திய படைகளும் முழு வீச்சில் பதிலடி தந்தன. 17 நாட்கள் நடைபெற்ற இந்த போரில் இந்தியாவின் கை ஓங்கியிருந்த நிலையில் போர் நிறுத்தம் செய்ய சர்வதேச நிர்பந்தங்கள் இந்தியாவுக்கு அதிகரித்தன. இருநாடுகளும் போரை நிறுத்தவதாக டாஸ்கண்டில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இந்தியா - பாகிஸ்தான் இடையே 3-வது போர் 1971-ம் ஆண்டு நடைபெற்றது. ஆனால் இந்த முறை கிழக்கு பகுதியில் இருந்து பாகிஸ்தானை தனி நாடாக்கும் நோக்கில் இந்த போரில் இந்தியா ஈடுபட்டது. 13 நாட்கள் மட்டுமே நடைபெற்ற இந்த போரில் பாகிஸ்தான் படைகளை இந்திய படைகள் பந்தாடின. சுமார் 93,000 பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்தியாவால் சிறைபிடிக்கப்பட்டனர். இறுதியில் பாகிஸ்தான் ராணுவம் சரணடைவதாக கூறியதால் போர் முடிவுக்கு வந்தது. இதன் விளைவாக பாகிஸ்தானின் கிழக்குப்பகுதி பங்களாதேஷ் என்ற பெயரில் தனிநாடாக உருவெடுத்தது.

இந்தியாவும் பாகிஸ்தானும் கடைசியாக 1999-ம் ஆண்டு போரில் ஈடுபட்டது. காஷ்மீரின் கார்கில் பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் படைகள் அந்த பகுதியை ஆக்கிரமித்தன. இந்திய படைகளும் பதிலடி கொடுத்த நிலையில் சண்டை இரண்டு மாதங்கள் வரை நீடித்தது. இதில் பெரும்பகுதியை இந்திய படைகள் மீட்ட நிலையில் மேற்கொண்டு போரை நடத்த இயலாத அளவுக்கு பாகிஸ்தானின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது. மேலும அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் நிர்பந்தம் தந்ததால் பாகிஸ்தான் படைகள் கார்கிலை விட்டு வெளியேறினர்.

ஆனாலும் இந்தியாவிடம் பாகிஸ்தான் நேரடியாக மோதவில்லையே தவிர மறைமுகமாக பயங்கரவாதிகளை தூண்டிவிட்டு அவ்வப்போது சண்டை நடத்தி கொண்டுதான் உள்ளது.

மே 2001: இந்திய பிரதமர் வாஜ்பாயும், பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷ்ரஃப்பும் உத்தர பிரதேசத்தில் உள்ள ஆக்ராவில் சந்தித்துக்கொண்டனர். ஆனால், எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.

அக்டோபர் 2001: ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் சட்டமன்றத்தில் நடந்த தாக்குதலில் 38 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

13 டிசம்பர் 2001: இந்திய நாடாளுமன்றத்தில் நடந்த தாக்குதலில் 14 பேர் பலியானார்கள்.

பிப்ரவரி 2007: இந்தியா பாகிஸ்தான் இடையே ஓடிய ரயிலில் குண்டு வெடித்ததில் 68 பேர் கொல்லப்பட்டனர்.

26 நவம்பர் 2008: மும்பை ரயில் நிலையம், நட்சத்திர ஓட்டல், யூத கலாசார மையம் ஆகியவற்றில் நடந்த 60 மணி நேர சண்டையில் 166 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் உள்ள லக்‌ஷர் இ தொய்பா இந்த தாக்குதலுக்கு பின்னால் இருப்பதால இந்தியா குற்றஞ்சாட்டியது.

ஜனவரி 2016: பதான்கோட்டில் நடந்த தாக்குதலில் 7 இந்திய படையினரும், 6 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

18 செப்டம்பர் 2016: இந்திய கட்டுப்பாட்டு காஷ்மீரில் உள்ள உரி ராணுவ முகாமில் கிளர்ச்சியாளர்கள் தாக்கியதில் 19 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

30 செப்டம்பர் 2016: பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்தியா தெரிவித்தது.


14 பிப்ரவரி 2019: ஜெய்ஷ் இ முகமது நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வீர மரணமடைந்தனர்.

26 பிப்ரவரி 2019: பாகிஸ்தான் பகுதியில் உள்ள காஷ்மீரி பயங்கரவாதிகள் மீது விமானப் படை தாக்குதல் நடத்தி, பயங்கரவாத முகாம்களை அழித்ததாக இந்தியா தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : attacks ,Pakistani ,India , India, Pakistan, war tensions, Kashmir, Prime Minister Modi, Imran Khan,
× RELATED சிறையில் உள்ள இம்ரானுடன் மனைவி சந்திப்பு