அசத்தும் ஸ்கோடா ரேபிட் மான்ட்டி கார்லோ

ஸ்கோடா கார் நிறுவனம், தனது பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் புதிய ரேபிட் மான்ட்டி கார்லோ மாடலை அறிமுகம் செய்துள்ளது. இப்புதிய கார், பிளாஷ் ரெட் என்ற விசேஷ சிவப்பு வண்ணத்தில் வந்துள்ளது. கிரில்  அமைப்பு, கூரை, சைடு மிரர் ஆகியவை விசேஷ கருப்பு வண்ணத்தில் கவர்ச்சிகரமாக இருக்கிறது. இந்த காரில் புரொஜெக்டர் ஹெட்லைட், எல்இடி பகல்நேர விளக்கு, பி பில்லர் கருப்பு வண்ணத்தில் உள்ளது. 16 அங்குல கிளப்பர்  அலாய் வீல் கொடுக்கப்பட்டுள்ளது. கருப்பு வண்ணத்திலான டிபியூச்சர், கருப்பு வண்ண டெயில்கேட் ஸ்பாய்லர் அமைப்பு, கருப்பு வண்ண ரூப் ரெயில் இடம்பெற்றுள்ளது.

உட்புறம் முழுவதுமாக கருப்பு வண்ண தீம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டீயரிங் வீல், அலுமினிய பெடல், இருக்கைகளில் சிவப்பு வண்ண தையல் வேலைப்பாடு அலங்கரிக்கின்றன. இந்த  காரில் 6.5 அங்குல தொடுதிரையுடன்கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த சாதனம் ஆப்பிள் கார் பிளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் மிரர் லிங்க் ஆகிய செயலிகளை சப்போர்ட் செய்யும்  வசதியை அளிக்கிறது. இந்த காரில் ஆட்டோமேட்டிக் வைப்பர், ரியர் பார்க்கிங் கேமரா, க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், டூயல் ஏர்பேக், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில்  ஹோல்டு அசிஸ்ட், த்ரீ பாயிண்ட் சீட் பெல்ட் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. இந்த கார், பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கும். இந்த காரில் இருக்கும் 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 105  பிஎச்பி பவரையும், 153 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் மாடல் அதிகபட்சமாக 110 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் டிஎஸ்ஜி  கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். இது, பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமாகவும், தனித்துவமான அம்சங்களையும் பெற்றுள்ளது. இப்புதிய கார், ₹11.16 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் வந்துள்ளது.  

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: