கொடைக்கானல் நகருக்குள் மீண்டும் புகுந்த காட்டெருமைகள்

*சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம்

கொடைக்கானல் : கொடைக்கானல் நகருக்குள் காட்டெருமைகள் புகுந்ததால் சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கொடைக்கானல் நகருக்குள் காட்டெருமைகள் அடிக்கடி புகுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆட்கள் நடமாட்டம் பகுதியில் காட்டெருமைகள் கூட்டம்கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அச்சமடைந்து ஓடுவதால் கீழே விழுந்து காயமுறுகின்றனர்.

சிலசமயம் காட்டெருமை தாக்குதலுக்கும் ஆளாகின்றனர். நேற்று காலை கொடைக்கானல் ஏழு ரோடு சந்திப்பு பகுதியில் 2 காட்டெருமைகள் புகுந்தன. இவற்றை கண்டதும் சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓடினர். இவர்கள் ஓடுவதை கண்டு காட்டெருமைகளும் மிரண்டு அங்குமிங்கும் ஓடி கடைசியாக வனப்பகுதிக்குள் சென்று விட்டன. எனவே அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன்பு காட்டெருமைகளை வனத்திற்குள் நிரந்தரமாக விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: