ரூ.10 லட்சம் கோடி முதலீட்டில் புதிதாக 10 புல்லட் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டம்

டெல்லி: சென்னை - மைசூர், பெங்களூர் உட்பட 10 புதிய வழித்தடங்களில் அதிவிரைவு புல்லட் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. டெல்லியில் இருந்து மும்பை, கொல்கத்தா, வாரணாசி, போபால் உள்ளிட்ட வழித்தடங்களிலும் புல்லட் ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக ரூ.10 லட்சம் கோடி முதலீட்டில் திட்டம் வகுக்கப்பட்டு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 2025 அல்லது 2026ஆம் ஆண்டில் புல்லட் ரயில் திட்டம் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் முதல் புல்லட் ரயிலுக்கான பெயரை தேர்வு செய்வது மற்றும் அடையாள சின்னம் வடிவமைக்கும் போட்டியை தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அறிவித்துள்ளது. இந்தியாவில் முதல் முறையாக புல்லட் ரயில் சேவை வருகிற 2022ம் ஆண்டு தொடங்கப்படவுள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது. முதல் கட்டமாக மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரயிலை இயக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில். புல்லட் ரயில் திட்டத்தை மேற்கொண்டு வரும் தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட், புல்லட் ரயிலுக்கான பெயரை தேர்வு செய்யவும், ரயிலின் மீது அமைக்கப்பட உள்ள அடையாள சின்னத்தை தேர்வு செய்யவும் தேசிய அளவிலான போட்டியை அறிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: