×

நாகர்கோவில்-தாம்பரம் இடையே சுவீதா சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: நாகர்கோவில்- தாம்பரம் இடையே சுவீதா சிறப்பு கட்டண சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில கூறப்பட்டுள்ளதாவது: நாகர்கோவில் இருந்து தாம்பரத்திற்கு சுவீதா சிறப்பு கட்டண ரயில் நாகர்கோவில் இருந்து ஏப்ரல் 7,14,21,28 மற்றும் மே 5,12,19,26 ஆகிய தேதிகளில் மாலை 5.05 மணிக்கு புறப்பட்டு  மறுநாள் காலை 5.05 மணிக்கு தாம்பரம் வந்தடையும். அதைப்போன்று எர்ணாகுளம் சந்திப்பில் இருந்து ஏப்ரல் 4,11,18,25 மற்றும் மே 2,9,16,23,30 ஆகிய தேதிகளில் இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மறுநாள் காலை 9.35 மணிக்கு வந்தடையும்.

 சென்னை சென்ட்ரல் இருந்து ஏப்ரல் 4,11,25, மற்றும் மே 2,9,16,23,30 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.45 மணிக்கு திருவனந்தபுரம் சந்திப்பு சென்றடையும். அதைப்போன்று திருவனந்தபுரம் சந்திப்பில் இருந்து ஏப்ரல் 3,10,17,24 மற்றும் மே 1,8,15,22,29 ஆகிய தேதிகளில் மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.45 மணிக்கு சென்ட்ரல் ரயில்நிலையம் வந்தடையும். சென்னை எழும்பூரில் இருந்து ஏப்ரல் 1,8,15,22,29 மற்றும் மே 13,20,27 ஆகிய தேதிகளில் மாலை 6.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.10 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். தூத்துக்குடியில் இருந்து மாலை 5.30 மணிக்கு ஏப்ரல் 2,9,16,23,30 மற்றும் மே 7,14,21,28 ஆகிய தேதிகளில் புறப்பட்டு மறுநாள் காலை 5.35மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

சென்னை எழும்பூரில் இருந்து மாலை 6.50 மணிக்கு ஏப்ரல் 3,10,19,24 மற்றும் மே 1,8,15,22,29 ஆகிய தேதிகளில் புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். அதைப்போன்று திருநெல்வேலியில் இருந்து மாலை 6.15 மணிக்கு ஏப்ரல் 4,11,18,25 மற்றும் மே 2,9,23,30 ஆகிய தேதிகளில் புறப்பட்டு மறுநாள் காலை சென்னை எழும்பூர் ரயில்நிலையத்திற்கு காலை 5.35 மணிக்கு வந்தடையும். அதைப்போன்று சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 8.45 மணிக்கு ஏப்ரல் 8,15,22,29 மற்றும் மே 6,13,20,27 ஆகிய தேதிகளில் புறப்பட்டு மறுநாள் காலை 4.15 மணிக்கு கோவை சென்றடையும். மேலும் சென்னை சென்ட்ரல்- மங்களூர் எக்ஸ்பிரஸ் இன்று முதல் ஆகஸ்ட் 23ம் தேதி வரை காட்பாடி, ஜோலார் பேட்ைட, மொரப்பூர் ஆகிய ரயில்நிலையங்களில் நின்று புறப்படும்.  இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Swetha ,Nagercoil ,Tambaram ,Southern Railway , Nagercoil, Tambaram, Swetha Special train, Southern Railway
× RELATED ஹோலி பண்டிகை நாகர்கோவில் – சென்னை சிறப்பு ரயில்