×

விருதுநகரில் பரபரப்பு: சமூக, தொழிலாளர் நலத்துறை அலுவலகங்களில் திடீர் ரெய்டு: கணக்கில் வராத பணம் பறிமுதல்

விருதுநகர்: விருதுநகர் சமூகநலத்துறை மற்றும் ராஜபாளையம் தொழிலாளர் துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் பயனாளிகளை தேர்வு செய்ய லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சமூகநலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் ஊழல் தடுப்பு  இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

இதில் முக்கிய அலுவலர் ஒருவர் மற்றும் 5 மக்கள் விரிவாக்க அலுவலர்களிடமிருந்து கணக்கில் காட்டப்படாத ரூ.29,070 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சோதனை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது.
கைப்பற்றப்பட்ட பணத்தை திருவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் செலுத்தி அலுவலகரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ராஜபாளையம் காந்தி சிலை அருகே உள்ள தொழிலாளர் துறை அலுவலகத்திலும் நேற்று மாலை சிவகங்கை லஞ்ச ஒழிப்பு அதிகாரி ரகுபதி தலைமையில் 5 போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் காட்டப்படாத ரூ.48 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக உதவி ஆய்வாளர் மாரிமுத்துவிடம் விசாரணை நடைபெற்றது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : raid ,department offices , Virudhunagar, Social and Labor Welfare, Raid, Money
× RELATED 6 நாட்கள் சோதனையில் பறக்கும் படையினரால் ரூ.9.32 கோடி பறிமுதல்