×

கூடுதல் ஆணையர் திருமகள் மீது நடவடிக்கை கோரி வழக்கு அறநிலையத்துறை ஆணையர் நேரில் ஆஜராக வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கூடுதல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் இந்து அறநிலையத்துறை ஆணையர் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள கோயில்களில் பழமையான சிலைகள் மாயமான விவகாரம் தொடர்பான வழக்குகள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் நடந்து வருகிறது. இந்த நிலையில், இந்த அமர்வு முன் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் காணொலிக் காட்சி மூலம் நேற்று விசாரணைக்கு வந்தது.  சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினரால் மீட்கப்பட்ட சிலைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு இடவசதி செய்து தரக்கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அர்விந்த் பாண்டியன், அருங்காட்சியகங்களில் சிலைகளை பாதுகாப்பாக வைக்க கட்டப்பட்டுள்ள இடங்களில் இடபற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களில் மீட்கப்பட்ட சிலைகளை பாதுகாப்பாக வைக்க உரிய இடங்கள் கண்டறியப்பட்டு வருகிறது. இதுகுறித்து இரண்டு வார காலத்துக்குள் அறிக்கை சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வார காலத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.  இதே அமர்வில் திருவண்ணாமலை கிரிவல பாதையில் கோயிலை இடித்து விட்டு தேநீர் கடை கட்டப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட நிலத்தை அளவிட்டு அதுதொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து உத்தரவிட்டனர்.   

இந்த அமர்வு முன் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சிலை மாயமான விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக இந்துசமய அறநிலையத்துறை ஆணையர்  நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Commissioner ,SriLanka ,Court of Hearing and Court Hearing: High Court , Additional Commissioner, Thirumala, Commissioner of Commissioner, High Court
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...