×

5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தக்கூடாது : வைகோ அறிக்கை

சென்னை: ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தக்கூடாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மத்தியில் ஆளும் பாஜ அரசு 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு கொண்டுவந்து, மாணவர்களை வடிகட்ட வேண்டும் என்று சட்டத் திருத்தம் செய்ய முனைந்தபோது, தமிழகம் உட்பட பல மாநிலங்கள் எதிர்த்தன. அதனால், இந்தப் பொதுத் தேர்வைக் கொண்டு வருவது அந்தந்த மாநிலங்களின் விருப்பம் என மாற்றம் செய்து, சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. மாநில அரசின் முன்னாள் கல்வி அமைச்சர் க.பாண்டியராஜன், ‘இந்தப் பொதுத் தேர்வை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மாட்டோம்’ என்று தொடர்ந்து கூறி வந்தார்.ஆனால், திடீர் திருப்பமாக, தமிழக அரசின் நீண்டகால கொள்கை முடிவை மாற்றி, 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கொண்டுவரும் முயற்சியை தமிழக பள்ளிக் ல்வித் துறை மேற்கொண்டு வருவதாக அறிகிறோம்.ஏற்கனவே நீட் தேர்வைக் கொண்டு வந்து ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்த மத்திய அரசு, தற்போது சின்னக் குழந்தைகளுக்கும் பொதுத் தேர்வைக் கொண்டுவந்து வடிகட்ட நினைப்பதைப் புறக்கணிக்க வேண்டிய தமிழக அரசு, மாநில அரசுக்கு முடிவு எடுக்கும் உரிமை இருந்தும்கூட, மத்திய அரசின் விருப்பத்திற்கு இணங்க இந்தப் பொதுத் தேர்வை அமுல்படுத்த முனைவது கண்டிக்கத்தக்கது ஆகும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : examination , General Report, Vaiko Report
× RELATED இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்ப...