பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு விஆர்எஸ் திட்டம் ரெடி : இதுவரை இல்லாத அளவு தொகை கிடைக்கும்

* 2017-18 நிதியாண்டின்படி பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு இழப்பீடு ₹31,287 கோடி. கடன் சுமை ₹14,000 கோடி.

*  இதுதவிர, பிஎஸ்என்எல் நிறுவன வருவாயில் 60 சதவீதம், எம்டிஎன்எல் வருவாயில் 90 சதவீதம் ஊழியர் சம்பளத்துக்கே போய்விடுகிறது.

*  இவர்களுக்கு விருப்ப ஓய்வு தருவதால் மிகப்பெரிய தொகை மிச்சமாகும்.

* பிஎஸ்என்எல்-லில் 75,000 பேர், எம்டிஎன்எல்-ல் 16,000 பேர் இன்னும் ஐந்தாறு ஆண்டுகளில் ஓய்வு பெற உள்ளனர்.

* சம்பளத்துக்கு செலவிடும் பணம் மிச்சமானால், அதனை 4ஜி உள்ளிட்ட தொழில்நுட்ப விரிவாக்கத்துக்கு பயன்படுத்தி நிறுவன வருவாய் மற்றும் செயல் திறனை மேம்படுத்த வழி வகுக்கும்

புதுடெல்லி: பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்க மெகா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதன்படி விருப்ப ஓய்வு பெறுபவர்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சலுகைகள் வழங்கப்பட இருக்கின்றன. இந்த திட்டத்துக்காக ₹8,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 நலிவடைந்த பொதுத்துறை நிறுவனங்களை மீட்டெடுக்கும் முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. நிதி உதவி செய்தும் மீட்க முடியாத நிறுவனங்கள் சில மூடப்பட்டு விட்டன. இதுபோல் பிஎஸ்என்எல் நிறுவனத்தையும் மூடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், பிஎஸ்என்எல் நிறுனத்தை மூடும் திட்டம் இல்லை என்று அந்த நிறுவனம் மறுப்பு தெரிவித்தது.இதற்கிடையில், மிகப்பெரிய பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களில் ஊழியர்களுக்கு சம்பளம் அளிப்பதே மிகப்பெரிய சுமையாக உள்ளது. இதனால் ஓய்வு வயதை நெருங்கியவர்களுக்கு விருப்ப ஓய்வு அளிப்பதன் மூலம் சம்பள செலவு மிச்சமாகும். பல ஆயிரம் கோடி ரூபாய் சுமை குறையும் என கருதப்படுகிறது.

இதற்காக செயல்படுத்தப்பட உள்ள விருப்ப ஓய்வு திட்டத்துக்கு பிஎஸ்என்எல்-க்கு ₹6,365 கோடி, டெல்லி மற்றும் மும்பை தொலைத்தொடர்பு வட்டங்களில் இயங்கும் எம்டிஎன்எல் நிறுவனத்துக்கு ₹2,120 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.   பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கடன் சுமை ₹14,000 கோடி. 2017-18 நிதியாண்டு இறுதியில் எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி இந்த நிறுவனம் ₹31,287 கோடி நஷ்டத்தில் உள்ளது. இதில் தற்போது 1.76 லட்சம் ஊழியர்கள் ஊழியர்கள் உள்ளனர். வருவாயில் 60 சதவீதம் ஊழியர் சம்பளத்துக்கே போய்விடுகிறது. எம்டிஎன்எல் நிறுவனத்தில் 22,000 ஊழியர்கள் உள்ளனர். இதில் வருவாயில் 90 சதவீதம், அதாவது, ₹19,000 கோடி சம்பளத்துக்கே போய்விடுகிறது. வருமானத்தில் பெரும்பகுதி சம்பளத்துக்கே செலவாகி விடுவதால் புதிய தொழில்நுட்பங்களை புகுத்த செலவு செய்ய பணம் இல்லை.இன்னும் 5 அல்லது 6 ஆண்டுகளில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 75,000 பேர், எம்டிஎன்எல் நிறுவனத்தில் 16,000 பேர் ஓய்வு பெற உள்ளனர். இவர்களுக்கு விரும்ப ஓய்வு அளிப்பதன் மூலம் பெரிய அளவில் செலவு மிச்சமாகும். இதற்காக இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய பணப்பலன், சலுகைகள் அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.4ஜி அலைவரிசை ஒதுக்கீடு செய்யாததால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தனியார் நிறுவன சேவைக்கு மாறி விட்டனர். விருப்ப ஓய்வு திட்டம் மூலம் மிச்சமாகும் பணம் 4ஜி தொழில்நுட்பத்தை விரிவுபடுத்தவும், மீண்டும் வாடிக்கையாளர்களை ஈர்த்து வருவாயை அதிகரிக்கவும் உதவும் என, சமீபத்தில் நடந்த டிஜிட்டல் கம்யூனிகேஷன் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: