மக்களவை தேர்தலில் பாஜ.வுக்கு பெரும்பான்மை கிடைக்காது : சர்வதேச நிறுவனம் கருத்துக் கணிப்பு

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் பா.ஜ வெற்றி பெற போராட வேண்டிய நிலை ஏற்படலாம். இந்த ேதர்தலில் எந்த தேசிய கட்சியு–்ம் பெரும்பான்மையுடன் வெற்றி பெற முடியாது. மாநில கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என ‘பிட்ச் சொல்யூசன்ஸ் மேக்ரோ ரிசர்வ்’ என்ற நிறுவனம் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த டிசம்பரில் நடந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கரில் பா.ஜ. தோல்வியடைந்து, காங்கிரஸ் வெற்றி பெற்றது. மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாக கருத்தப்பட்ட இந்த தேர்தலில், மக்களிடையே பாஜ.வுக்கு ஆதரவு குறைந்தது தெளிவாக தெரிந்தது. இந்நிலையில், மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. 534 உறுப்பினர்கள் கொண்ட மக்களவையில் பா.ஜ தலைமையிலான தே.ஜ கூட்டணிக்கு தனி பெரும்பான்மை கிடைப்பது சந்தேகம் என இந்தியா டுடே நடத்திய கருத்த கணிப்பு ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ‘பிட்ச் சொல்யூசன்ஸ் மேக்ரோ ரிசர்ச் என்ற நிறுவனம், பல நாடுகளில் நடைபெறும் தேர்தல் குறித்து துல்லியாமான கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. உலக அரசியல், பொருளாதார மாற்றங்களை மையமாக வைத்தும இந்த நிறுவனம் கருத்து  கணிப்பு வெளியிடுகிறது. மக்களவை தேர்தல் குறித்து இந்நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ கட்சி தனிப் பெரும்பான்மை கிடைக்க போராட வேண்டிய நிலை ஏற்படும். இந்த தேர்தலில் எந்த தேசிய கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை. மாநில கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்துதான் தேசிய கட்சிகள் ஆட்சி அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். பாஜ.வுக்கு மாநில கட்சிகளுடன் முரண்பாடுகள் உள்ளன. அதனால் மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைக்க, காங்கிரசுக்கே அதிக வாய்ப்புகள் உள்ளன. விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்தும் பா.ஜ அரசின் முயற்சிகள் எல்லாம் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. புல்வாமா தாக்குதல் மக்களிடையே தேசிய உணர்வை தூண்டியுள்ளது. இது பா.ஜ கட்சிக்கு ஓரளவு சாதகமாக இருக்கலாம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: