×

அமலாக்கத்துறை விசாரணை 5வது முறையாக வதேரா ஆஜர்

புதுடெல்லி: சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில், அமலாக்கத் துறை விசாரணைக்கு  5வது முறையாக ராபர்ட் வதேரா நேற்று ஆஜரானார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா. இவர் லண்டனில சொத்து வாங்கியதில் சட்ட விரோத பணபரிமாற்றம் நடைபெற்றதாக கூறி அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது. இதை தொடர்ந்து வதேரா அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகி வருகிறார். இதுவரை 4 முறை  ஆஜரானார். சுமார் 26 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐந்தாவது முறையாக நேற்று வதேரா விசாரணனைக்கு ஆஜரானார்.  நேற்று காலை 11 மணிக்கு மத்திய டெல்லியின் ஜாம்நகர் ஹவுசில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா ஆஜரானார். அப்போது, அமலாக்கத் துறையை கண்டித்து அவருடைய ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vadra Azhar ,5th Amendment Inquiry , The illegal money laundering case, Robert Vadra
× RELATED பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம்...